
குழந்தைகளை உஷாராக கண்காணிக்கனும்.இல்லை என்றால்
கண் இமைக்கும் நேரத்திற்குள் என்ன என்னவோ செய்வார்கள்.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக கண்காணிக்கவும்.
பிரிட்ஜ், கிச்சன் கேபினெட்,பீரோ , மின்சார வொயர்கள் எல்லாத்தை சரியாக இருக்கிறதா என்று அப்ப அபப் செக் பண்ணி கொண்டே இருக்கனும்.
பிரிட்ஜில் உள்ள் பொருட்களை இழுத்து போடுவார்கள்.சாப்பாட்டு பொருட்கள் அதிகமாக இருப்பதால் சப்பு கொட்டி கொண்டு அதை எட்டி பார்க்க ஓடுவார்கள்.
கிச்சன் கேபினேட்டில் கத்தி, கத்திரிகோல், ஊறுகாய் பாட்டில்கள் எல்லாத்தையும் இழுத்து போடுவார்கள்.
டீவி, மிசி,போன் சார்ஜ் செய்யும் வொயர்களை எடுத்து கடித்து கொண்டு இருப்பார்கள்.
பீரோவில் அப்ப தான் துணியை அடுக்கி வைப்பீர்கள் உடனே அவர்களும் அம்மாவை போல் வேலை பார்ப்பதாக எண்ணி ரொம்ப கவலையா எல்லாத்தையும் இழுத்து போடுவார்கள்.
பவுடர் டப்பா கிடைத்தால் போது வாயால் கடித்து ஓப்பன் செய்து அவ்வளத்தையும் கொட்டி அதில் சர்க்கஸ் செய்வார்கள்.

Haneef, Ismail
வீடு துடைக்கும் போது கூட உங்கள் கண்பார்வையிலேயே ஓர் உயரமான இடத்தில் உட்காரவைத்து விட்டு துடைக்கலாம்.
கதவில் சாவியை வைக்காதீர்கள் குழந்தைகளுக்கு எழுந்து நடக்கும் போது முதலில் கண்ணில் தென்படுவது கதவில் உள்ள சாவி தான் உள்ளே இருந்து பூட்டி கொள்வார்கள். பிறகு நீங்கள் வெளியில் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அல்லாட வேண்டியது தான். இந்த சம்பவம் எல்லா இடத்திலும் நடந்திருக்கு இதை நான் நேரில் பார்த்துள்ளேன்.
கேள்வி பட்டும் இருக்கிறேன். அப்படிதான் அபுதாபியில் எல்லாம் உயரமான கட்டிடம் ஆறாவது எட்டாவது மாடியில் ஒரு பிளாட்டில் ஒரு குழந்தை இதே போல் பூட்டி கொண்டது.ஏதாவது சத்தம் கொடுத்தால் ஜன்னல் வழியே குதிக்க கூட செய்யும் நம்மை தூக்க வருகிறார்கள் என்று ஒடி ஒளிவார்கள், உடனே அந்த குழந்தையின் தாய் பக்கத்து வீட்டு ஜன்னலில் இருந்து இந்த ரூமினுல் குதித்து வந்து குழந்தையை தூக்கி கொண்டு கதவை திறந்து வெளியில் வந்தார்கள்.
ஆனால் அந்த தாய் எங்கிருந்து காப்பாத்தினார்கள் என்று வந்து எட்டி பார்த்தா யாராலும் அந்த ஜன்னலிலிருந்து பக்கத்து ஜன்னலுக்கு குதிக்க முடியாதாம் எட்டி பார்த்தா தலை சுற்றுகிறதாம், அந்த தாய் உயரத்தை பார்த்து இருந்தால் காபபத்தி இருக்க முடியாது, அவர் எண்ணம் எல்லாம் ரூமிற்குள் எப்படி செல்வது என்று மட்டும் தான் இருந்தது.
//இதில் இன்னும் நிறைய பாயிண்டுகள் இருக்கு இப்போதைக்கு இதே நிறிஅய போட்டு விட்டேன் என்று நினைக்கிறேன், இது என் குழந்தை வளர்பு பிளாககில் பதிவுகள் போட முடியாததால் இதில் போட்டுள்ளேன்..//