Tuesday, March 31, 2009

பிலிப்பைனி குழந்தை உணவு


1. பிலிப்பைனி குழ‌ந்தை உணவு ‍

உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்

உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================


2. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு ‍

வாழைப‌ழ‌ம்

வாழை ப‌ழ‌த்தை ந‌ல்ல‌ ம‌சித்து ஊட்டி விட‌னும்.
==================================================




3. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு

முட்டை ஒன்று
அரை வேக்காடாக‌ வேக‌ வைத்து அதை ஸ்பூனால் வ‌ழித்து ஊட்டி விட‌னும்
=================================================
நீங்க‌ளே பார்த்து இருப்பீர்க‌ள் பிலைப்ப‌னை குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ கொழு கொழுன்னு இருப்பார்க‌ள்
நீங்களும் உங்கள் குழ‌தைக‌ளுக்கு இது போல் முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

Friday, March 27, 2009

எஜிப்ஷியன் குழந்தை உணவு, ஆத்ஸ் சோர்பா

இது எஜிப்ஷியன் பிஸியோதரபி டாக்டர் அவங்க குழந்தைக்கு செய்வதை சொல்லி கொடுத்தார்கள். நானும் நம் இந்தியன் உண்வை (பூரி கிழங்கும், கேசரி கேக்கும் )அவங்களுக்கு சொல்லி கொடுத்தேன். இது எகிப்து நாட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவாகும். ஆறு மாததிலிருந்து இதை கொடுக்கலாம்.

ஆத்ஸ் சோர்பா

தேவையான பொருட்கள்
***********************

துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளை கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரை பழம் சிறியது

செய்முறை
***********


1. கேரட், தக்காளி,உருளையை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.

2. பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக அரிந்த தக்காளி கேரட்,உருளை,மிளகு தூள்,உப்பு தூல், பூண்டையையும் பொடியாக நருக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.

3.வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்


குறிப்பு:

சில குழந்தைகளுக்கு என்ன புட் கொடுபப்து என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெருந்த்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாபிடுவார்கள்.

Sunday, March 22, 2009

குழந்தைகளை தூங்க வைக்கும் போது

1. குழந்தைகளை கையிலேயே வைத்து பழக்கப் படுத்ததீர்கள்.

2. எவ்வளவுக்கு எவ்வளவு கீழே போட்டு பழக்க படுத்து கிறீர்களோ அவ்வளவு நல்லது.

3. கை சுகம் கண்டு விட்டால் பிறகு எந்த வேலையும் செய்ய முடியாது.எங்கும் நகர விட மாட்டார்கள்.

4. கீழே அவர்களை போட்டு கையை காலை நல்லா ஆட்ட விடனும், அது நல்ல உடற்பயிற்சியும் கூட.

5. குழந்தைகள் நல்ல தூங்கினால் நல்லது.

6. சரியாக தூங்காமல் ஒரே அழுது கொண்டு இருந்தால் வயிறு சரியாக நிறைந்திருகாது.
அப்போது தாய் பாலுடன் ஏதாவது பக்க உணவும் ஆரம்பியுங்கள்.

Sunday, March 15, 2009

குழந்தைகளுக்கு பால் மற்றும் தயிர் சாதம்

1. குழந்தைகளுக்கு பால் சாதம் கொஞ்சம வாழைபழம் சேர்த்து ஆறு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறையாவது கொடுத்து பழகவும்.

2. அதே போல் தயிர் மற்றும் மோர் சாதமும் எட்டு மாதத்திலிருந்து கொடுத்து பழகவும்.

3. தயிர் மோர் புளிப்பில்லாததாக இருக்கனும். தயிர் சதம் செய்யும் போது பால் முக்கால் பாகமும், தயிர் கால் பாகமும் சேர்த்து செய்து கொடுக்கவும்.
இது சாப்பிட ஈசியாக இருக்கும்.

4. குழந்தைகள் ஓடி ஆடி அங்க இங்க இடித்து கீழே விழுந்தால் வாயில் அடி பட்டு சாப்பிட முடியாது இது போல் காரம் இல்லாததாக இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.

5. வயிற்று போக்கு சமையத்திலும் இந்த சாப்பாடு கொடுக்கலாம். சில பேருக்கு அந்த நேரத்தில் என்ன கொடுப்பது என்றே தெரியாது.


6. இப்படி கொடுப்பதால் உடல் சூடும் தனியும், தயிர் மற்றும் மோர் சாதம் மதியமும், பால் சாதம் இரவும் கொடுக்கலாம்.

ஜலீலா

Monday, March 9, 2009

குழந்தைகளுக்கு வயிற்று போக்கு

ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதம்வரை அடிக்கடி வயிற்று போக்கு வரும்.

பல் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து, தவழு போது எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும் வரை

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது எதை பார்த்தாலும் நர நர என்று கடிப்பார்கள்.

பெட்டின் ஓரம்,சுவர்,எல்ல பொருட்கள் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் கடித்து கொண்டே இருப்பார்கள்.

அப்போது எதையாவது எடுத்து வாயில் போட்டு உடனே தொடர்ந்து வயிற்று போக்கு ஆரம்பித்து விடும்.

வெறும் தாய் பால் கொடுப்பவர்கள் அவர்கள் முன்று வேளைக்கு வெரும் பிரெட் ஹார்லிக்ஸ் பால் சேர்க்காமல் சாப்பிட்டால் போதும்.

இன்னும் ஒரு மூன்று நாளைக்கு உணவு லைட்டானா உணவு சாப்பிட்டால் போதும்.

அப்படி செரிலாக்,முட்டை வெள்ளை கரு, நெஸ்டம், இன்னும் வீட்டு உணவுகளை சில பேர் 4, 5 மாதத்திலிருந்தே கொடுக்க பழக்க படுத்துவார்கள். அவர்கள்

1. ஆறிய வெண்ணீர் நிறைய கொடுக்கனும்.

2. வெண்ணீரில் குலுக்கோஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு கரைத்து கொடுக்கலாம்.

3.அர்ரோட் மாவு கஞ்சி இது தான் உடனே கேட்கும், அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்வது.

அர்ரோட் மாவு கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
அர்ரோட் மாவு பிஸ்கேட் வெண்ணீரில் அல்லது லேசாக லைட்டாக போட பப்பட்ட பிளாக் டீயில் ஊறவைத்து கொடுக்கலாம்.

4.இல்லை வெரும் நெஸ்டம் கொடுக்கலாம்.

5.கோதுமை களி காய்ச்சி கொடுக்கலாம்.

6.கேரட் ஆப்பில் வேகவைத்து நன்கு மிக்சியில் அரைத்தும் ஊட்டி விடாலாம்.


ஜலீலா

(தொடரும்)