Monday, June 29, 2009

கேரட் ஜூஸ் ‍ குழ‌ந்தைக‌ளுக்கு












தேவையான‌ பொருட்க‌ள்



கேரட் = ஒன்று
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = ஒரு டம்ளர்
சர்க்கரை = ஒரு மேசை கரண்டி (அ) தேன்




செய்முறை






கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறூபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


குறிப்பு:




குழந்தைக‌ளுக்கு இதை ஆறு மாத‌த்திலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுத்து ப‌ழ‌க்க‌வும்.


முத‌லில் வெரும் ஆறிய‌ வெண்ணீரில் செய்து கொடுக்க‌வும்.
இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.

பிற‌கு எந்த‌ பார்முலா மில்க் ஆர‌ம்பிக்கிறீர்க‌ளோ அதில் கொடுக்க‌வும்.
பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கியுப்ஸ் போட்டு கொடுக்கலாம்.

நல்ல ஒரு எனர்ஜி பானம்.

கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம்.
க‌ர்பிணிபெண்க‌ள் தின‌ம் இதை குடிக்க‌லாம். குழ‌ந்தைக்கு ந‌ல்ல‌ க‌ல‌ர் கிடைக்கும்.
முக‌த்தில் அரைத்தும் தேய்க்க‌லாம். முக‌ம் ப‌ள‌ ப‌ள‌க்கும்.


Sunday, June 28, 2009

ஆறு மாதத்திலிருந்து


ஆறு மாதத்திலிருந்து எல்லா உணவும் கொஞ்ச கொஞ்சமாக பழக்க படுத்தலாம். நல்ல மசித்து முன்று ஸ்பூன் அளவில் கொடுத்தால் போதும்.

ஆறு மாதம் முதல் லேசான காரம், புளிப்பு,இனிப்பு எல்லா சுவையையும் கொடுத்து பழக்க படுத்தனும்.

மில்க் பிக்கிஸ் பிஸ்கேட், மேரி பிஸ்கேட் கூட ஒன்று வெண்ணீரில் ஊறவைத்து ஊட்டி விடலாம்.

சாதம் நல்ல குழைய வேகவைத்து அதில் கீரை வெந்த தண்ணீர் சேர்த்து ஒரு சொட்டு நெய் உருக்கி சேர்த்து ஊட்டி விடவும்.

பிறகு பருப்பு வேகவைத்து அதையும் சேர்த்து சாததில் கலந்து நன்கு மசித்து கொடுக்கலாம்.
பருப்பு சிருபருப்பு சேர்த்து கொண்டால் நல்ல வெந்து விடும் ஈசியாக ஜீரணம் ஆகும்.

கிழங்கு வகைகளை வேகவைத்தும் ஊட்டி விடலாம்.


ஆப்பிலை வேக வைத்து தோல் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடலாம்.

கிச்சிடி போல் அரிசியுடன் கேரட், உருளை, எலும்பில்லாத சிக்கன் சிறிது சேர்த்து பூண்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மசித்து அல்லது மிக்சியில் கூழ் போல் அரைக்காமல் முக்கால் பதம் அரைத்து ஒரு விரலால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடவும்.

(தொடரும்)

Saturday, June 20, 2009

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலுருந்து கொடுக்கும் உணவுகள்.



1.ஆப்பில் கேரட்
ஆப்பில் கேரட் இரண்டையும் நன்கு வேகவைத்து கட்டி தட்டாமல் மசித்து கொடுக்கவும்.

2.உருளை கிழங்கு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து தோலெடுத்து அதில் ஒரு சிட்டிக்கை அளவு
மிளகுதூள் சேர்த்து ஊட்டி விடவும்.

3.குழந்தைகளுக்கு நேந்திரன் பழத்தை வேகவைத்து மசித்தும் கொடுக்கலாம்.

4. சூடான சாதத்தை நன்கு மசித்து அதில் கீரை வேக வைத்த தண்ணீ, வேக வைத்த பருப்பு போன்றவை சேர்ந்து பிசைந்து ஒரு சொட்டு நெய் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
5.எப்போதும் குழந்தைகளுக்கு சிறிது பால் சாதம் பழக்க படுத்துவது நல்லது.

6. முட்டை புட்டிங் பால் ச‌ர்க்க‌ரை , முட்டை சேர்த்து க‌ல‌க்கி சின்ன‌ டிப‌ன் பாக்சில் வைத்து குக்க‌ரில் இர‌ண்டு மூன்று விசில் விட்டு வேக‌ வைத்தும் ஊட்டி விட‌லாம்.
மெது மெதுவாக‌ ஒவ்வொன்றாக‌ ஆர‌ம்பித்து அதை ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ள‌னும்.

7. கிச்சிடி
அரிசி, பாசி ப‌ருப்பு , கேர‌ட்,மிள‌கு தூள், பூண்டு, நெய் சேர்த்து ந‌ன்கு குக்க‌ரில் ம‌சிய‌ வேக‌வைத்து கொடுக்க‌லாம்.இதில் சிறிய‌ துண்டு சிக்க‌னும் சேர்த்து வேக‌வைக்க‌லாம்.

8. குழ‌ந்தைக‌ளுக்கு சாத‌த்தை போட்டு அடைக்காம‌ல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுப்ப‌து ந‌ல்ல‌து.
ஒரு இட‌மா உட்கார‌ வைத்து உண‌வு கொடுத்து பழ‌க்குங்க‌ள். க‌ண்டிப்பாக‌ க‌ழுத்தில் பிப் (அ) ஒரு காட்ட‌ன் துணியை க‌ட்டி கொள்ள‌வும்.

Thursday, June 11, 2009

குழந்தைகளுக்கு 4 மாதத்திலிருந்து உணவு பாகம் = 1



1.பிறந்த குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது.அதிக வெயில் காலத்தில் குழந்தைகள் தொண்டை வறண்டு போகும், இல்லை வயிற்று வலி,வயிறு கல்லு மாதிரி ஆகும் இதற்கெல்லாம் நன்கு காய்ச்சிய ஆறிய வெண்ணீரைசிறிய தேக்கரண்டி அல்லது பாலாடையால் இரண்டு மூன்று சொட்டு காலை 11 மணி அளவில் கொடுக்கலாம்.

2. அடுத்து செரிலாக் ஆரம்பிப்பார்கள் அது 4 மாதத்திலிருந்து கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.கேழ்வரகு காய்ச்சி கொடுக்கலாம் இது நல்ல தெம்பை கொடுக்கும்.எது காய்ச்சினாலும் கட்டி தட்டாமல் நல்ல பட்டு போல் குழந்தைகளுக்கு சாப்பிட ஈசியாக உள்ளே போவது போல் இருக்கனும். வாயில் குத்தாத கூர்மை இல்லாத ஷாஃப்டான ஸ்பூனால் கொடுக்கவும்.


3.ஆறு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா டேஸ்டும் சாப்பிட வைத்தால் தான் நாள் போக போக எது கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.


4.முட்டை வேக வைத்து முக்கால் வேக்காடக கொடுக்கலாம், ரொம்ப கல்லு மாதிரி வேகாமல் சிறிது குழ குழப்பாக இருந்தால் நல்லது.


5.எந்த உணவு புதுசா ஆரம்பிப்பதாக இருந்தாலும் காலை 10 லிருந்து 4 கிற்குள் ஆரம்பிக்கவும்.இது பிள்ளைகளுக்கு ஒத்து கொள்கிறதா என்பதை பார்த்து கொள்ள முடியும். இரவில் கொடுத்தால் வயிறு செமிக்க லேட் ஆகும்.பாலே குடித்து கொண்டு இருந்த குழந்தைக்கு தீடீரென திட உணவு ஆரம்பிக்கும் போது இப்படி ஆரம்பிப்பது நல்லது.


6. அதே போல் நெஸ்டம், செரிலாக் கிளறும் போது அதில் ஆப்பில் ஜூஸ், அல்லது சூப் தண்ணீர் ஊற்றி கிளறலாம்.



Saturday, June 6, 2009

பிறந்த குழந்தைக்கு நாப்பிரேஷ் வந்தால்.



1.பிறந்த குழந்தைகளுக்கு எந்த நேரமும் பேம்பரே போடுவதால், போதுமான காற்று இல்லாமல் மூடி வைப்பதாலும் ரேஷ் வருகிறது.அடைத்த மாதிரி ஆகிவிடுகிறது,ஆகையால் இடை இடையே டயப்பர் துணி (அ) மெல்லிய காட்டன் சேலை மற்றும் துப்பட்டாவின் துணியையும் சதுரமாக வெட்டி மடித்து கட்டி விடலாம்.


2. அதே போல் அடிக்கடி மலம் கழித்து கொண்டே இருப்பார்கள்.
அது பின் புறம் தோலோடு ஒட்டி கொள்ளும், ஒரு முறை இரண்டு முறை கழுவலாம், சும்மா கழுவ கூடாது.

3. அதற்கு தேங்காய் எண்ணை (அ) பேபி ஆயிலை நன்கு இடுப்பிற்கு கீழ் முன்னாடி பின்னாடி நல்ல தேய்த்து விட்டு பேம்பரோ துணியோ கட்டுங்கள்.

4. இப்போது நம்பர் டூ போய் விட்டால் காட்டன் பஞ்சை வெண்ணீரில் நனைத்து அப்படியே துடைத்து எடுங்கள், ஒட்டவும் செய்யாது, ரேஷ்ஷும் வராது, கீரிம் பவுடர் எதுவும் போட வேண்டாம் அது யுரின் போகும் இடத்தில் போய் அடைத்து கொள்ளும்.