Wednesday, May 27, 2009

பாலுட்டும் தாய்மார்களுக்கு

1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.

2. பால் அதிகமாக சுரக்க ‍= ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும்.
ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.

3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது


4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.


5.தாய்மார்கள் இர‌ண்டு காதுக‌ளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ள‌வும்.
காலில் என்னேர‌மும் செருப்பு அனிய‌வும்.
இர‌வில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ள‌வும்.
இப்ப‌டி செய்வ‌தால் ந‌ர‌ம்புகளில் காத்து ஏறுவ‌தை த‌விர்க்க‌லாம்.

6.எலும்புகள் வலுவடைய‌ சிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் ந‌ல்ல‌ சுர‌க்கும்.

7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.

8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும்.
(இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.


ப‌ச்சிள‌ம் குழ‌ந்தையை குளிக்க‌ வைக்கும் போது பாக‌ம் 2



1. பிற‌ந்த‌குழ‌ந்தைக்கு த‌லைக்கு ஊற்றும் போது மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ ஊற்ற‌னும்.
காது , மூக்கு தொண்டையில் த‌ண்ணீர் போகாத‌ வ‌ண்ண‌ம் ஊற்ற‌னும்.
ந‌ம் காலில் ச‌ரிவ‌லாக‌ ப‌டுக்க‌ வைத்து ஊற்றினால் இப்ப‌டி த‌ன்ணீர் உள்ளே போவ‌தை த‌விர்க்க‌லாம்.


2. இர‌ண்டு காலையும் ஒண்று சேர்த்து ச‌ரிவ‌லாக வைத்து கொண்டு குழ‌ந்தை த‌லை மேலே இருக்குமாறு வைத்து கொள்ள‌வும்.

3. க‌ழுத்திலிருந்து மேலே வ‌ரை முத‌லில் ந‌ல்ல‌தேய்த்து ஊற்றி விட்டு பிற‌கு த‌லையில் முன் ப‌க்க‌மாக‌ ஊற்ற‌மால் பின் ப‌க்க‌மாக‌ ஊற்ற‌வேண்டும்.ஊற்றும் போது இர‌ண்டு காது ம‌ற்றும் நெற்றி ப‌க்க‌ம் கையை வைத்து கொண்டு ஊற்ற‌வும்.

4. போன‌ குறிப்பில் சொன்ன‌ப‌டி உட‌னே ஒரு பெரிய‌ காட்ட‌ன் துப்ப‌ட்டாவில் சுருட்டி ந‌ன்கு ப‌ஞ்சை துடைப்ப‌து போல் துடைத்து ப‌வுட‌ர் சிறிது உச்ச‌ந்த‌லையில் வைக்க‌வும். இது த‌ண்ணீர் நின்றால் அதை எடுத்து விடும்.

5. எக்கார‌ண‌த்தை கொண்டும் காதில் ப‌ட்ஸை போட‌ கூடாது.
ஒரு சிறிய‌ மெல்லிய‌ ம‌ல் துணியை ந‌ன்கு சுருட்டி காதில் துடைக்க‌வும்.

6. குழ‌ந்தை குளித்து முடித்த‌தும் உட‌னே சாம்ராணி புகை மூட்டி அதில் உட‌ம்பு, த‌லை,கால் போன்ற‌வ‌ற்றை காண்பிக்க‌வும்.
சாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ பிடித்து கொள்ளுங்க‌ள்.
இல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.

7. பிற‌கு ந‌ன்கு வ‌யிற்றை நிரைத்து துணியில் சுற்றி உட‌னே தூங்க‌ வையுங்க‌ள்.
குளித்தால் குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ தூங்குவார்க‌ள், ந‌ல்ல‌ தூங்கினால் தான் ச‌தை வைக்கும். அமுல் பேபி போல் கொழு கொழு வென‌ இருப்பார்க‌ள்.

Monday, May 25, 2009

பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது பாகம் ‍ 1








1. பிறந்த பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையாக குளிக்க வைக்க வேன்டும்.

2. சில குழந்தைகள் துள்ளி கொண்டு தண்ணீரில் வழுக்கி விழுந்து விடுவார்கள்.



3. வாரம் ஒரு முறை நல்ல வெது வெதுபான வெண்ணீரில் நல்ல குளிக்கவைக்க்க வேண்டும்.
தினம் குளிக்க வைக்க ஒரு சிறிய சாதம் வைக்கும் பேசின் (அ)சப்பாத்தி மாவு குழைக்கும் தொட்டி போதுமானது.

4. தொட்டியில் பாதியளவு வெண்ணீர் வைத்து அதில் லிக்விட் பேபி பாத் லோஷனை இரண்டு டிராப் விட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள், தனியாக ஒரு மக்கில் வெண்ணீர் வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய குட்டி டம்ளர் போட்டு வையுங்கள்.

5.குளிக்க வைக்க்கும் முன் ஒரு மெல்லிய காட்டன் துப்பட்டாவை ரெடியாக உங்கள் தோள் பட்டையில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.குழந்தை குளித்து முடித்ததும் உடனே சுருட்டிக்கொள்ள இது உதவும்.
இது ரூம் அல்ல்து ஹலிலேயே குளிக்க வைக்கலாம்

6.இடது கை ஈரமில்லாமல் இருக்கட்டும் இடது கையால் குழந்தையின் தலையை பிடித்து கொள்ளுங்கள். பாதி அள்வு உள்ள தொட்டில் வெண்ணிரில் குழந்தை உட்காரும் பொசிஷனில்வையுங்கள் தண்ணீர் குழந்தையின் இடுப்பு வரை இருக்கட்டும்.
இப்போது ரொம்ப நேரம் குழந்தையை ஊறவிடாமல் வலது கையால் நன்கு தேய்த்து கை கால் இடுப்பு எல்லாம் தேய்த்து முதுகிலும் தேய்த்து இரண்டு முக்கு கழுத்து வரை முக்கி எடுக்கவும். முகத்தில் அள்ளி ஊற்றாமல் கை விரகளால் தொட்டு துடைக்கவும்.

7. ரொம்ப நேரம் குழந்தைகளை தண்ணீரில் ஊறவிடாமல் சீக்கிரமாக ஊற்றி முடிக்கவும்

8. எல்லாமுடித்து கடைசியில் சுத்தமான வெண்ணீரை சிறிய டம்ளரால் ஊற்றி உடனே பெரிய காட்டன் துப்பாட்டாவில் சுற்றி எடுத்து கொள்ளவும்.

9. மெயினாக ரூமில் பேன் ஏசியை ஆஃப் செய்து விட்டு துடைக்கவும்.

10. கீரிம் அல்லது லோஷன் தடவி நல்ல வயிற்றை நிறைத்து (கண்டிப்பாக குழந்தைக்கு பால் கொடுக்குமுன் தாய் மார்கள் சூடாக காபி (அ) பால் (அ) சூப் குடித்து கொள்ளவும்). தூங்க வைக்கவும்.

11. குழந்தைகள் குளித்தால் நல்ல சுகமாக தூங்குவார்கள்.
நல்ல தூங்கினால் தான் குழந்தைகளுக்கு சதை வைக்கும்.

குறிப்பு:

இதற்கு முன் உள்ள டிப்ஸ் களில் குழந்தை மசாஜ் பற்றி எழுதி இருந்தேன்.
ஒவ்வொரு முறை குளிக்க் வைக்கும் போதும் சிறிது ஆலிவ் ஆயில்(அ) பேபி ஆயில் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வைக்கவும்.


(தொடரும்)

Saturday, May 2, 2009

குழந்தைகளுக்கு மோஷன் பிராப்ளமா?

சில குழந்தைகளுக்கு வயிறு கல் மாதிரி ஆகி மோஷன் டைட்டாடும்.

சரியா மோஷன் போக வில்லை என்றால் குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வாமிட் வருவது போல் இருக்கும்.

வயிற்றில் விளக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும்.
சூடான வெது வெதுப்பான வெண்ணீரை அடிக்கடி கொடுக்கவும்.


ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ர்காம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.
டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.


கெட்டியான உணவை தவிர்க்கவும்.
ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும்.

அப்படியும் எப்போதுமே மோஷன் பிராப்ளம் என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிட வில்லை என்றால் ஹல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும்.

Friday, May 1, 2009

பிறந்த குழந்தைகளின் முகம் மற்றும் உடம்பில் உள்ள முடியை அகற்ற‌

சில பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முகம் மற்றும் உடம்பு பகுதியில் நிறைய முடிகள் இருக்கும் அதை அகற்ற.


1.முட்டை வெள்ளை கருவில், தாய்ப்பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தேய்த்து ஆறிய வென்னீரில் பஞ்சு அல்ல மெல்லிய மல் துணியை நனைத்து துடைத்து எடுக்கவும்.

2. சமீபத்தில் நான் கேள்வி பட்டது கோதுமை மாவில் நெய் கலந்து தேய்த்தாலும் போய் விடும்.

கவனிக்க வேண்டியது:

1. பெண்குழந்தைகளுக்கு புருவத்தில் படாமல் தேய்க்கவும்.

2. ஆண் குழந்தைகளுக்கு தாடி, மீசை வளரும் இடத்தில் படமால் தேய்க்கவும்.