Wednesday, January 27, 2010

எட்டு மாத குழந்தைக்கு சாப்பாடு



குழந்தைகளுக்கு எழு எட்டு மாதம் ஆனாதும் பல் வளர தொடங்கிடும், எல்லா தாய் மார்களுக்கும் முதன் முதலில் என்ன ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருக்கும்.
எந்த திட உணவு ஆரம்பிக்கும் போது குழந்தைகள் எடுத்த எடுப்பிலேயே நிறைய சாப்பிடனும் என்று எதிர் பார்க்க வேண்டாம்.
இரண்டு ஸ்புன் , முன்று ஸ்பூன் உள்ளே போனால் அதே பெரிய விழியம்.
ஆனால் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க படுத்தனும்.

Saturday, January 23, 2010

அன்பான வாசகர்களுக்கு


அன்பான வாசகர்களுக்கு என்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு இதில் இருந்து காப்பி செய்து அனுப்பாதீர்கள்.





அருசுவை, தமிழ்குடும்பம், பிலாக்கில் போடும் என் பதிவுகள் குழந்தை வளர்பு, டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள். போன்ற பல குறிப்புகளை பிரபல தளஙகளுக்கு காப்பி செய்து போடப்பட்டுள்ளது .

சிலர் இந்த குறிப்புகளை வைத்தே பிலாக் ஆரம்பித்த தளம் போல் நடத்துகிறார்கள்

இதை யார் அனுப்பி இருக்காங்க‌ என்று தெரிய‌வில்லை.
என் அனுப‌வ‌த்தை ப‌டித்து நீங்க‌ளும் ப‌ய‌ன‌டைந்து கொள்ள‌ தான் இங்கு கொடுக்கிறேன்.



இதை எடுத்து உங்க‌ள் த‌ள‌த்தில் போட்டு கொள்ள‌ இல்லை.
எந்த‌ காப்பி அடித்த‌ குறிப்பாக‌ இருந்தாலும் கீழே பெய‌ர் போட்டு இருக்க‌மாட்டார்க‌ள் இதிலிருந்து அது காப்பி குறிப்பு என்று தெரிந்து கொள்ள‌லாம்.




பதிவு திருட்டு ஆகையால் சில நாட்களுக்கு குறிப்புகள் இடம் பெறாது.


Monday, January 11, 2010

தாய்மை ஒரு இனிய பயணம்.



கர்பிணி பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்


வாங்க தோழிகளே இங்கு ஒரு தோழி கர்பிணி பெண்களுக்காக தன்னுடைய அனுபவத்தை பதிவுகளாக போட்டு இருக்காங்க.
புதுசா கல்யாணம் ஆகப்போகிறவர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆகி குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பிலாக் உதவும்.

இன்று தான் இந்த பிலாக் என் கண்ணில் பட்டது

தாய்மை ஒரு இனிய பயணம் இதில் சென்று படித்து பயணடைந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்காவது யாருக்காவது ஏதாவது ஒரு முறையில் உதவனும்.
நான் இப்படி பதிவுகள் மூலம் உதவுகிறேன்.ரொம்ப சந்தோஷம்..
நிறைய வெளிநாட்டு பெண்கள் தளங்களில் முதல் கேட்கும் கேள்வி, இப்ப நான் கர்பமா இருக்கேன், இப்ப நான் என்ன சாப்பிடனும்,எப்படி இருக்கனும் என்ன செய்யனும் கேட்பார்கள்.
சிலருக்கு ரொம்ப நாள் கழித்து அனுபவங்கள் மறந்தே போய்விடும்.
இர‌ண்டு குழ‌ந்தைக்கு பிற‌கு முன்றாவ‌து குழ‌ந்தை இடைவெளி விட்டு பெறுவ‌ர்க‌ளூக்கு கூட‌ எல்லாமே புதுமையா இருக்கும் ஆனால் யாரிட‌மும் கேட்க‌ கூச்ச‌மாக‌ இருக்கும், அப்ப‌டியே கேட்டாலும் இர‌ண்டு பிள்ளைய‌ பெத்தாச்சு இது கூட‌ தெரியாதா என்பார்க‌ள்.
அப்படி கேட்கும் பெண்க‌ளுக்கு இந்த‌ தாய் மூல‌ம் பெண்க‌ளுக்கே உண்டான‌ இந்த‌ "தாயின் இனிய‌ ப‌ய‌ண‌த்தை" நீங்க‌ள் ப‌டித்த‌தோடு விட்டு விடாம‌ல் உங்க‌ளை சார்ந்த‌ அனைவ‌ருக்கும் இதை ப‌ற்றி சொல்லுங்க‌ள்.
இதை அழகான முறையில் பதிவு போட்ட "தாய்" வாழ்க‌!

Friday, January 8, 2010

உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் எலும்பு வ‌லுவாக, புஷ்டியாக இருக்கனுமா?



குழந்தைகளுக்கு கோதுமை மாவு பரோட்டாவை பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து வாரம் ஒரு முறை ஊட்டி விடுங்கள்.
நல்ல சத்தான மஸ்தான ஆகாரம்.

இப்படி கொடுப்பதால் நல்ல தளதளன்னு கண்ணம் வைத்து ஷைனிங்காக இருப்பார்கள். இப்படி தொடர்ந்து கொடுத்து வருவதால் அவ‌ர்க‌ள் பெரிய வர்கள் ஆனாலும் எலும்பு ரொம்ப‌ வ‌லுவாக‌ இருக்கும்.

தேவையானவை



கோதுமை மாவு = கால் ட‌ம்ள‌ர்
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு மேசை க‌ர‌ண்டி
நெய் = அரை டீஸ்பூன்
உப்பு ‍= சிட்டிக்கை
ச‌ர்க்க‌ரை = கால் தேக்க‌ர‌ண்டி
மிள‌கு தூள் = ஒரு சிட்டிக்கை
பால்+ த‌ண்ணீர் சிறிது
நெய் + எண்ணை = ரொட்டி சுட‌ தேவையான‌ அள‌வு
பால் + ச‌ர்க்க‌ரை = ஊற‌வைக்க‌ தேவையான‌ அள‌வு



செய்முறை

கோதுமை மாவில் உப்பு ச‌ர்க்க‌ரை,மிள‌கு தூள் சேர்த்து நெய்யை உருக்கி ஊற்றி, சூடானா பால் + வெண்ணீரை இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி போதுமான‌து லேசாக‌ தெளித்து பிச‌றி ந‌ன்கு குழைத்து 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

பிற‌கு ப‌ரோட்டாக்க‌ளாக‌ கொசுவ‌ம் வைத்து ம‌டித்து வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ தேய்த்து லேய‌ராக‌ வ‌ரும் ப‌ரோட்டாக்க‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.

இர‌ண்டு சிறிய‌ ப‌ரோட்டாக்க‌ள் வ‌ரும்.

இதை நான் என் பைய‌னுக்கு ஆறு மாத‌த்திலிருந்து கொடுத்து இருக்கேன். ஆர‌ம்ப‌த்தில் கால் ப‌ரோட்டாதான் உள்ளே போகும் போக‌ ந‌ல்ல‌ விரும்பி சாப்பிடுவார்க‌ள்.


இனிப்பு பிடிக‌க‌த‌ பிள்ளைக‌ளுக்கு, பால் + கொஞ்ச‌மா குருமா ஊற்றி ஊற‌வைத்தும் கொடுக்க‌லாம்.

உங்க‌ளுக்கு ஆறு மாத‌த்தில் கொடுக்க‌ யோச‌னையாக‌ இருந்தால் எட்டு மாத‌த்திலிருந்து கொடுக்க‌லாம்.

ப‌ல் வ‌ள‌ர்ந்து க‌டித்து சாப்பிட‌ ஆர‌ம்பித்த‌தும் ப‌ருப்பு,கூட்டு, குழ‌ம்பு வ‌கைக‌ள் தொட்டு கொடுக‌க்லாம்.



மிள‌கு சேர்வ‌தால் ச‌ளி இருந்தாலும் க‌ட்டுப‌டும்.பொட்டு க‌ட‌லை, நெய், ச‌ர்க்க‌ரை, பால் சேருவ‌தால் ந‌ல்ல‌ புஷ்டி + ஷைனிங் வ‌ரும்.