Showing posts with label குழந்தை உணவு. Show all posts
Showing posts with label குழந்தை உணவு. Show all posts

Wednesday, January 27, 2010

எட்டு மாத குழந்தைக்கு சாப்பாடு



குழந்தைகளுக்கு எழு எட்டு மாதம் ஆனாதும் பல் வளர தொடங்கிடும், எல்லா தாய் மார்களுக்கும் முதன் முதலில் என்ன ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருக்கும்.
எந்த திட உணவு ஆரம்பிக்கும் போது குழந்தைகள் எடுத்த எடுப்பிலேயே நிறைய சாப்பிடனும் என்று எதிர் பார்க்க வேண்டாம்.
இரண்டு ஸ்புன் , முன்று ஸ்பூன் உள்ளே போனால் அதே பெரிய விழியம்.
ஆனால் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க படுத்தனும்.

Friday, January 8, 2010

உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் எலும்பு வ‌லுவாக, புஷ்டியாக இருக்கனுமா?



குழந்தைகளுக்கு கோதுமை மாவு பரோட்டாவை பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து வாரம் ஒரு முறை ஊட்டி விடுங்கள்.
நல்ல சத்தான மஸ்தான ஆகாரம்.

இப்படி கொடுப்பதால் நல்ல தளதளன்னு கண்ணம் வைத்து ஷைனிங்காக இருப்பார்கள். இப்படி தொடர்ந்து கொடுத்து வருவதால் அவ‌ர்க‌ள் பெரிய வர்கள் ஆனாலும் எலும்பு ரொம்ப‌ வ‌லுவாக‌ இருக்கும்.

தேவையானவை



கோதுமை மாவு = கால் ட‌ம்ள‌ர்
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு மேசை க‌ர‌ண்டி
நெய் = அரை டீஸ்பூன்
உப்பு ‍= சிட்டிக்கை
ச‌ர்க்க‌ரை = கால் தேக்க‌ர‌ண்டி
மிள‌கு தூள் = ஒரு சிட்டிக்கை
பால்+ த‌ண்ணீர் சிறிது
நெய் + எண்ணை = ரொட்டி சுட‌ தேவையான‌ அள‌வு
பால் + ச‌ர்க்க‌ரை = ஊற‌வைக்க‌ தேவையான‌ அள‌வு



செய்முறை

கோதுமை மாவில் உப்பு ச‌ர்க்க‌ரை,மிள‌கு தூள் சேர்த்து நெய்யை உருக்கி ஊற்றி, சூடானா பால் + வெண்ணீரை இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி போதுமான‌து லேசாக‌ தெளித்து பிச‌றி ந‌ன்கு குழைத்து 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

பிற‌கு ப‌ரோட்டாக்க‌ளாக‌ கொசுவ‌ம் வைத்து ம‌டித்து வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ தேய்த்து லேய‌ராக‌ வ‌ரும் ப‌ரோட்டாக்க‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.

இர‌ண்டு சிறிய‌ ப‌ரோட்டாக்க‌ள் வ‌ரும்.

இதை நான் என் பைய‌னுக்கு ஆறு மாத‌த்திலிருந்து கொடுத்து இருக்கேன். ஆர‌ம்ப‌த்தில் கால் ப‌ரோட்டாதான் உள்ளே போகும் போக‌ ந‌ல்ல‌ விரும்பி சாப்பிடுவார்க‌ள்.


இனிப்பு பிடிக‌க‌த‌ பிள்ளைக‌ளுக்கு, பால் + கொஞ்ச‌மா குருமா ஊற்றி ஊற‌வைத்தும் கொடுக்க‌லாம்.

உங்க‌ளுக்கு ஆறு மாத‌த்தில் கொடுக்க‌ யோச‌னையாக‌ இருந்தால் எட்டு மாத‌த்திலிருந்து கொடுக்க‌லாம்.

ப‌ல் வ‌ள‌ர்ந்து க‌டித்து சாப்பிட‌ ஆர‌ம்பித்த‌தும் ப‌ருப்பு,கூட்டு, குழ‌ம்பு வ‌கைக‌ள் தொட்டு கொடுக‌க்லாம்.



மிள‌கு சேர்வ‌தால் ச‌ளி இருந்தாலும் க‌ட்டுப‌டும்.பொட்டு க‌ட‌லை, நெய், ச‌ர்க்க‌ரை, பால் சேருவ‌தால் ந‌ல்ல‌ புஷ்டி + ஷைனிங் வ‌ரும்.

Monday, June 29, 2009

கேரட் ஜூஸ் ‍ குழ‌ந்தைக‌ளுக்கு












தேவையான‌ பொருட்க‌ள்



கேரட் = ஒன்று
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = ஒரு டம்ளர்
சர்க்கரை = ஒரு மேசை கரண்டி (அ) தேன்




செய்முறை






கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறூபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


குறிப்பு:




குழந்தைக‌ளுக்கு இதை ஆறு மாத‌த்திலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுத்து ப‌ழ‌க்க‌வும்.


முத‌லில் வெரும் ஆறிய‌ வெண்ணீரில் செய்து கொடுக்க‌வும்.
இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.

பிற‌கு எந்த‌ பார்முலா மில்க் ஆர‌ம்பிக்கிறீர்க‌ளோ அதில் கொடுக்க‌வும்.
பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கியுப்ஸ் போட்டு கொடுக்கலாம்.

நல்ல ஒரு எனர்ஜி பானம்.

கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம்.
க‌ர்பிணிபெண்க‌ள் தின‌ம் இதை குடிக்க‌லாம். குழ‌ந்தைக்கு ந‌ல்ல‌ க‌ல‌ர் கிடைக்கும்.
முக‌த்தில் அரைத்தும் தேய்க்க‌லாம். முக‌ம் ப‌ள‌ ப‌ள‌க்கும்.


Saturday, June 20, 2009

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலுருந்து கொடுக்கும் உணவுகள்.



1.ஆப்பில் கேரட்
ஆப்பில் கேரட் இரண்டையும் நன்கு வேகவைத்து கட்டி தட்டாமல் மசித்து கொடுக்கவும்.

2.உருளை கிழங்கு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து தோலெடுத்து அதில் ஒரு சிட்டிக்கை அளவு
மிளகுதூள் சேர்த்து ஊட்டி விடவும்.

3.குழந்தைகளுக்கு நேந்திரன் பழத்தை வேகவைத்து மசித்தும் கொடுக்கலாம்.

4. சூடான சாதத்தை நன்கு மசித்து அதில் கீரை வேக வைத்த தண்ணீ, வேக வைத்த பருப்பு போன்றவை சேர்ந்து பிசைந்து ஒரு சொட்டு நெய் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
5.எப்போதும் குழந்தைகளுக்கு சிறிது பால் சாதம் பழக்க படுத்துவது நல்லது.

6. முட்டை புட்டிங் பால் ச‌ர்க்க‌ரை , முட்டை சேர்த்து க‌ல‌க்கி சின்ன‌ டிப‌ன் பாக்சில் வைத்து குக்க‌ரில் இர‌ண்டு மூன்று விசில் விட்டு வேக‌ வைத்தும் ஊட்டி விட‌லாம்.
மெது மெதுவாக‌ ஒவ்வொன்றாக‌ ஆர‌ம்பித்து அதை ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ள‌னும்.

7. கிச்சிடி
அரிசி, பாசி ப‌ருப்பு , கேர‌ட்,மிள‌கு தூள், பூண்டு, நெய் சேர்த்து ந‌ன்கு குக்க‌ரில் ம‌சிய‌ வேக‌வைத்து கொடுக்க‌லாம்.இதில் சிறிய‌ துண்டு சிக்க‌னும் சேர்த்து வேக‌வைக்க‌லாம்.

8. குழ‌ந்தைக‌ளுக்கு சாத‌த்தை போட்டு அடைக்காம‌ல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுப்ப‌து ந‌ல்ல‌து.
ஒரு இட‌மா உட்கார‌ வைத்து உண‌வு கொடுத்து பழ‌க்குங்க‌ள். க‌ண்டிப்பாக‌ க‌ழுத்தில் பிப் (அ) ஒரு காட்ட‌ன் துணியை க‌ட்டி கொள்ள‌வும்.

Thursday, June 11, 2009

குழந்தைகளுக்கு 4 மாதத்திலிருந்து உணவு பாகம் = 1



1.பிறந்த குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது.அதிக வெயில் காலத்தில் குழந்தைகள் தொண்டை வறண்டு போகும், இல்லை வயிற்று வலி,வயிறு கல்லு மாதிரி ஆகும் இதற்கெல்லாம் நன்கு காய்ச்சிய ஆறிய வெண்ணீரைசிறிய தேக்கரண்டி அல்லது பாலாடையால் இரண்டு மூன்று சொட்டு காலை 11 மணி அளவில் கொடுக்கலாம்.

2. அடுத்து செரிலாக் ஆரம்பிப்பார்கள் அது 4 மாதத்திலிருந்து கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.கேழ்வரகு காய்ச்சி கொடுக்கலாம் இது நல்ல தெம்பை கொடுக்கும்.எது காய்ச்சினாலும் கட்டி தட்டாமல் நல்ல பட்டு போல் குழந்தைகளுக்கு சாப்பிட ஈசியாக உள்ளே போவது போல் இருக்கனும். வாயில் குத்தாத கூர்மை இல்லாத ஷாஃப்டான ஸ்பூனால் கொடுக்கவும்.


3.ஆறு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா டேஸ்டும் சாப்பிட வைத்தால் தான் நாள் போக போக எது கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.


4.முட்டை வேக வைத்து முக்கால் வேக்காடக கொடுக்கலாம், ரொம்ப கல்லு மாதிரி வேகாமல் சிறிது குழ குழப்பாக இருந்தால் நல்லது.


5.எந்த உணவு புதுசா ஆரம்பிப்பதாக இருந்தாலும் காலை 10 லிருந்து 4 கிற்குள் ஆரம்பிக்கவும்.இது பிள்ளைகளுக்கு ஒத்து கொள்கிறதா என்பதை பார்த்து கொள்ள முடியும். இரவில் கொடுத்தால் வயிறு செமிக்க லேட் ஆகும்.பாலே குடித்து கொண்டு இருந்த குழந்தைக்கு தீடீரென திட உணவு ஆரம்பிக்கும் போது இப்படி ஆரம்பிப்பது நல்லது.


6. அதே போல் நெஸ்டம், செரிலாக் கிளறும் போது அதில் ஆப்பில் ஜூஸ், அல்லது சூப் தண்ணீர் ஊற்றி கிளறலாம்.



Saturday, May 2, 2009

குழந்தைகளுக்கு மோஷன் பிராப்ளமா?

சில குழந்தைகளுக்கு வயிறு கல் மாதிரி ஆகி மோஷன் டைட்டாடும்.

சரியா மோஷன் போக வில்லை என்றால் குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வாமிட் வருவது போல் இருக்கும்.

வயிற்றில் விளக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும்.
சூடான வெது வெதுப்பான வெண்ணீரை அடிக்கடி கொடுக்கவும்.


ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ர்காம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.
டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.


கெட்டியான உணவை தவிர்க்கவும்.
ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும்.

அப்படியும் எப்போதுமே மோஷன் பிராப்ளம் என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிட வில்லை என்றால் ஹல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும்.

Saturday, April 4, 2009

குழந்தைகளின் ஹெல்தி உணவு

தேவையான பொருட்கள்
**********************

பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று

செய்முறை
***********

மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர‌க்கி ஆறியதும் உங்கள் செல்ல குழந்தைக்கு ஊட்டி விடுங்கள்

செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.




குறிப்பு:

பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்

Tuesday, March 31, 2009

பிலிப்பைனி குழந்தை உணவு


1. பிலிப்பைனி குழ‌ந்தை உணவு ‍

உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்

உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================


2. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு ‍

வாழைப‌ழ‌ம்

வாழை ப‌ழ‌த்தை ந‌ல்ல‌ ம‌சித்து ஊட்டி விட‌னும்.
==================================================




3. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு

முட்டை ஒன்று
அரை வேக்காடாக‌ வேக‌ வைத்து அதை ஸ்பூனால் வ‌ழித்து ஊட்டி விட‌னும்
=================================================
நீங்க‌ளே பார்த்து இருப்பீர்க‌ள் பிலைப்ப‌னை குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ கொழு கொழுன்னு இருப்பார்க‌ள்
நீங்களும் உங்கள் குழ‌தைக‌ளுக்கு இது போல் முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

Friday, March 27, 2009

எஜிப்ஷியன் குழந்தை உணவு, ஆத்ஸ் சோர்பா

இது எஜிப்ஷியன் பிஸியோதரபி டாக்டர் அவங்க குழந்தைக்கு செய்வதை சொல்லி கொடுத்தார்கள். நானும் நம் இந்தியன் உண்வை (பூரி கிழங்கும், கேசரி கேக்கும் )அவங்களுக்கு சொல்லி கொடுத்தேன். இது எகிப்து நாட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவாகும். ஆறு மாததிலிருந்து இதை கொடுக்கலாம்.

ஆத்ஸ் சோர்பா

தேவையான பொருட்கள்
***********************

துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளை கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரை பழம் சிறியது

செய்முறை
***********


1. கேரட், தக்காளி,உருளையை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.

2. பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக அரிந்த தக்காளி கேரட்,உருளை,மிளகு தூள்,உப்பு தூல், பூண்டையையும் பொடியாக நருக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.

3.வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்


குறிப்பு:

சில குழந்தைகளுக்கு என்ன புட் கொடுபப்து என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெருந்த்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாபிடுவார்கள்.

Sunday, March 15, 2009

குழந்தைகளுக்கு பால் மற்றும் தயிர் சாதம்

1. குழந்தைகளுக்கு பால் சாதம் கொஞ்சம வாழைபழம் சேர்த்து ஆறு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறையாவது கொடுத்து பழகவும்.

2. அதே போல் தயிர் மற்றும் மோர் சாதமும் எட்டு மாதத்திலிருந்து கொடுத்து பழகவும்.

3. தயிர் மோர் புளிப்பில்லாததாக இருக்கனும். தயிர் சதம் செய்யும் போது பால் முக்கால் பாகமும், தயிர் கால் பாகமும் சேர்த்து செய்து கொடுக்கவும்.
இது சாப்பிட ஈசியாக இருக்கும்.

4. குழந்தைகள் ஓடி ஆடி அங்க இங்க இடித்து கீழே விழுந்தால் வாயில் அடி பட்டு சாப்பிட முடியாது இது போல் காரம் இல்லாததாக இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.

5. வயிற்று போக்கு சமையத்திலும் இந்த சாப்பாடு கொடுக்கலாம். சில பேருக்கு அந்த நேரத்தில் என்ன கொடுப்பது என்றே தெரியாது.


6. இப்படி கொடுப்பதால் உடல் சூடும் தனியும், தயிர் மற்றும் மோர் சாதம் மதியமும், பால் சாதம் இரவும் கொடுக்கலாம்.

ஜலீலா

Saturday, February 28, 2009

தால்

தேவையான பொருட்கள்

வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்

செய்முறை

பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.


குறிப்பு:

பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.

ஜலீலா, துபாய்

குழந்தையின் ரிச் உணவு

தேவையான பொருட்கள்

ஆப்பில் - ஒன்று
பேரிச்சை - முன்று
நேந்திரம் பழம் - ஒன்று

செய்முறை


ஆப்பிலை நாலாக அரிந்து நடுவில் உள்ள கொட்டையை நீக்கவும்.
நேந்திரம் பழம் தோலுரித்து நன்காக கட் பண்ணவும்.
பேரிச்சையில் உள்ள கொட்டைகளை நீக்கவும்.
முன்றையும் இட்லி பானையில் அவித்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கொடுக்கவும்.

இதை ஒரு பவுளில் வைத்து குத்தாதா ஸ்பூனினால் அல்லது ஒரு விரலால் எடுத்து நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தடவவும்.
ஒரேயடியாக கொடுக்க கூடாது, இது நான்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம், பெரிய வளர்ந்த பிள்ளைகள் என்றால் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுகலாம்.
இது மிகவும் சத்தான உணவு.

ஜலீலா

குழந்தைகளின் டானிக்

உங்கள் குழந்தைகள் அமுல் பேபி போல் கொழு கொழு என்று ஆகனுமா இதோ இதை டிரை பன்ணுங்க



குழந்தைகளின் டானிக்


தேவையான பொருட்கள்
***********************

பொட்டு கடலை - ஐம்பது கிராம்
நாட்டு சர்க்கரை - இருபதைந்து கிராம்
பூவன் வாழைபழம் - இரன்டு

செய்முறை
*************
1. பொட்டு கடலையை கரியாமல் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
2. பொட்டுகடலை ஆறியதும் மிக்ஸியில் பொடித்துபொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதைலிருந்து இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து கொள்ள வேண்டியது.
3. அதில் நாட்டு சர்க்கரையை மன்னில்லால் எடுத்து கலக்கி பூவன் வாழைபழத்தை பிசைந்து கொடுக்கவும்.
4. நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதா சர்க்கரை போதும்.
5. இதை கொடுத்து கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கொடுங்கள்.


குறிப்பு:

ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டு கடலை ,சர்க்கரை, கொஞ்சம் மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமலும் கேட்கும்.
கொஞ்சம் சோம்பு சேர்த்து கொண்டாலும் வயிற்றுவலிக்கு கூட கேட்கும்.
இதை வழமையாக கொடுத்து வந்தால் உங்கள் குழந்தை அமுல் பேபி போல் கொழு கொழு என இருப்பார்கள்.



ஜலீலா

குழந்தைகளின் ஹெல்தி உணவு

தேவையான பொருட்கள்

பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று

செய்முறை

மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர்க்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாகா உருளை கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.


குறிப்பு:

பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்.

ஹெல்தி கஞ்சி

தேவையான பொருட்கள்


ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
பாதம் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
பிளெயின் குளுகோஸ் - முன்று தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக

செய்முறை


தண்ணீரில் பால்,பாதம் பவுடர்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் காய்ச்சி அதில் பால், குளுக்கோஸ் சேர்த்து கொடுக்கவும்.


குறிப்பு:

ஓட்ஸ்,பாதம் எல்லாம் திரித்து வைத்து கொள்ள வேண்டியது. பிள்ளைகளுக்கு உடம்புக்கு முடியாத போது செய்து கொடுக்கலாம்.


ஜலீலா