Wednesday, April 22, 2009

பொரி அரிசி

வருத்த வேர்கடலை = அரை கப்
பச்சரிசி = அரை கப்
சர்க்கரை = கால் கப்
வருத்த முந்திரி = ஐந்து


மேல் சொன்ன அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வருத்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
எட்டு மாத குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் சாப்பிடலாம்.
நல்ல சத்தான கலவை இது

குறிப்பு:

இது சாப்பிடும் போது சிரிக்க பேச வைககாதீர்கல், பொறையேறி விடும்.
இல்லை இதில் சின்ன வாழைபழம் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
சிறிது பாசி பருப்பு வருத்து கலந்து கொண்டால் கூட நல்ல வாசனையாக இருக்கும்.
இல்லை ராகி காய்ச்சும் போது கூட இந்த கலவை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.

Tuesday, April 21, 2009

குழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?

உங்கள் குழந்தைகளை கிரீச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?

பழக்க படாத இடம் போனதும் அழும், ஆகையால் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் விடுங்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டவும்.

அங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.
அதுவும் கொஞ்சம் டைம் எடுக்கும்.
இல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.
அங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.


அதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.

குழந்தைகளில் பல வகை

சில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.
ஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.

சில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.

கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ போக‌ ச‌ரியாகிடும் எப்ப‌டியும் ஒரு மாத‌ம் பிடிக்கும் அங்கு அவ‌ர்க‌ள் ப‌ழ‌குவ‌த‌ற்கு, அது வ‌ரை நீங்க‌ள் பொருமையாக‌ இருக்க‌வேண்டும்.

Sunday, April 19, 2009

குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்

வெயில் காலங்களில் அதிக சூடு காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால் ஒன்றும் பயப்பட தேவையில்லை.

குழந்தைகள் கொப்புளங்களில் சொரியாமல் பார்த்து கொள்ளவும்.

இல்லை என்றால் அந்த தழும்பு போகவே போகாது.

படுக்கைகள் நல்ல சுத்தமாக வைக்க்வௌம் தினம் மாற்றவும்.
வெள்ளை பெட்சீட்டாக இருந்தால் நல்லது.
வேப்பிலை, பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொடுக்கவும். வயிற்றில் உள்ள புண் ஆற.
நிறைய வேப்பிலையை பூச்சிகள் இல்லாமல் தட்டி அதை கட்டாக கட்டி அதனால் அரிப்பு எடுக்கும் இடத்தில் இதமாக வருடி விடவும்.

அசைவ‌ம் கொடுக்க‌ வேண்டாம், பால் சாத‌ம், மோர் சாத‌ம், ப‌ருப்பு சாத‌ம், த‌யிர் சாத‌ம் போன்ற‌வை கொடுத்தால் போதும்.

ஓட்ஸ், ராகி போன்ற‌ பான‌ங்க‌ளும் கொடுக்க‌லாம்.
கேர‌ட் ஜூஸ், ஆப்பில் ஜூஸ் , இள‌நீரும் கொடுக்க‌லாம்.
ஏழு நாட்கள் (அ) ஒன்பது நாட்கள் (அ) 11 நாட்களில் எல்லாம் சரியாகிடும்.
கொஞ்ச நாட்களுக்கு தழும்பு இருக்கும்.
அதற்கு வேப்பிலையுடன் கொத்துமல்லி தழை,கருவேப்பிலை, மஞ்சள்,சிறிது கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து நல்ல அள்ளி அள்ளி புண்களில் தடவி குளிக்க வைக்கவும்.

Monday, April 6, 2009

குழந்தை வளர்பு டிப்ஸ், டிப்ஸ்,டிப்ஸ்

இப்போது மாம்பழ சீசன் ஆரம்ப்பிக்கிரது குழந்தைகள் எதை பார்த்தாலும் வாயை திறப்பார்கள் அதுக்குன்னு மாம்பழம் சாப்பிடும பொருள் எல்லாம் வாயில் தடவாதீர்கள்.

இது உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.

தவழ, எழுந்து நிற்க, நடக்க ஆரம்பிக்கும் போது கையில் கிடைக்கும் அனைத்தையும் வாயில் வைப்பார்கள்.

கொஞ்சம் இந்த ஸ்டேஜில் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளவும்.

பிறண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம்.

ஆனால் பிறண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போகாதீர்கள்.

பெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி இருக்கும்.
அப்ப்டியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.

அதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கும் ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

பெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி

குழந்தைகளுக்கு வயிற்று வலி என்றால் மேல் வயிறு முட்டை மாதிரியும், கல்லு மாதிரியும் இருக்கும்.

அதற்கு தொப்புளை சுற்றி விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை தடவவும்.


சூடான‌ வெண்ணீரை ஆற்றி அப்ப‌ அப்ப‌ இரண்டு ஸ்பூன் கொடுக்க‌வும்.

அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கால் தேக்க‌ர‌ண்டி சோம்பை லேசாகா கருகாமல் வ‌ருத்து த‌ண்ணீர் சேர்த்து இர‌ண்டு ஸ்பூனாக‌ வ‌ற்ற‌விட்டு கொடுக்க‌வும்.

Saturday, April 4, 2009

குழந்தைகளின் ஹெல்தி உணவு

தேவையான பொருட்கள்
**********************

பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று

செய்முறை
***********

மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர‌க்கி ஆறியதும் உங்கள் செல்ல குழந்தைக்கு ஊட்டி விடுங்கள்

செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.




குறிப்பு:

பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்