Saturday, June 20, 2009

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலுருந்து கொடுக்கும் உணவுகள்.



1.ஆப்பில் கேரட்
ஆப்பில் கேரட் இரண்டையும் நன்கு வேகவைத்து கட்டி தட்டாமல் மசித்து கொடுக்கவும்.

2.உருளை கிழங்கு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து தோலெடுத்து அதில் ஒரு சிட்டிக்கை அளவு
மிளகுதூள் சேர்த்து ஊட்டி விடவும்.

3.குழந்தைகளுக்கு நேந்திரன் பழத்தை வேகவைத்து மசித்தும் கொடுக்கலாம்.

4. சூடான சாதத்தை நன்கு மசித்து அதில் கீரை வேக வைத்த தண்ணீ, வேக வைத்த பருப்பு போன்றவை சேர்ந்து பிசைந்து ஒரு சொட்டு நெய் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
5.எப்போதும் குழந்தைகளுக்கு சிறிது பால் சாதம் பழக்க படுத்துவது நல்லது.

6. முட்டை புட்டிங் பால் ச‌ர்க்க‌ரை , முட்டை சேர்த்து க‌ல‌க்கி சின்ன‌ டிப‌ன் பாக்சில் வைத்து குக்க‌ரில் இர‌ண்டு மூன்று விசில் விட்டு வேக‌ வைத்தும் ஊட்டி விட‌லாம்.
மெது மெதுவாக‌ ஒவ்வொன்றாக‌ ஆர‌ம்பித்து அதை ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ள‌னும்.

7. கிச்சிடி
அரிசி, பாசி ப‌ருப்பு , கேர‌ட்,மிள‌கு தூள், பூண்டு, நெய் சேர்த்து ந‌ன்கு குக்க‌ரில் ம‌சிய‌ வேக‌வைத்து கொடுக்க‌லாம்.இதில் சிறிய‌ துண்டு சிக்க‌னும் சேர்த்து வேக‌வைக்க‌லாம்.

8. குழ‌ந்தைக‌ளுக்கு சாத‌த்தை போட்டு அடைக்காம‌ல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுப்ப‌து ந‌ல்ல‌து.
ஒரு இட‌மா உட்கார‌ வைத்து உண‌வு கொடுத்து பழ‌க்குங்க‌ள். க‌ண்டிப்பாக‌ க‌ழுத்தில் பிப் (அ) ஒரு காட்ட‌ன் துணியை க‌ட்டி கொள்ள‌வும்.

4 comments:

Menaga Sathia said...

நல்ல பதிவுக்கு நன்றி ஜலிலாக்கா!!

Jaleela Kamal said...

//நல்ல பதிவுக்கு நன்றி ஜலிலாக்கா!!//

படித்து பார்த்து நன்றி சொன்னதற்கு மிக்க நன்றி மேனகா.

மாதேவி said...

"குழ‌ந்தைக‌ளுக்கு .... கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுப்ப‌து ந‌ல்ல‌து."

ஆமாம் நீங்கள் கூறியது போல.சாப்பிடும் நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
எங்கள் அவசரத்தைக் குழ‌ந்தைக‌ளில் காட்டுதல் கூடாது.

Jaleela Kamal said...

மாதேவி வருகைக்கு நன்றி, இதேல்லாம் என் அனுபவத்தில் கண்டது.