Monday, April 6, 2009

குழந்தை வளர்பு டிப்ஸ், டிப்ஸ்,டிப்ஸ்

இப்போது மாம்பழ சீசன் ஆரம்ப்பிக்கிரது குழந்தைகள் எதை பார்த்தாலும் வாயை திறப்பார்கள் அதுக்குன்னு மாம்பழம் சாப்பிடும பொருள் எல்லாம் வாயில் தடவாதீர்கள்.

இது உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.

தவழ, எழுந்து நிற்க, நடக்க ஆரம்பிக்கும் போது கையில் கிடைக்கும் அனைத்தையும் வாயில் வைப்பார்கள்.

கொஞ்சம் இந்த ஸ்டேஜில் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளவும்.

பிறண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம்.

ஆனால் பிறண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போகாதீர்கள்.

பெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி இருக்கும்.
அப்ப்டியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.

அதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கும் ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

பெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்.

2 comments:

Unknown said...

நல்ல டிப்ஸ் அக்கா என் மகள் அடிக்கடி கீழே விழுந்து தலை விங்கி விடும். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ய் தேய்பேன். விக்ஸ் டப்பாபில் 2 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று போட்டு இருக்கு. ஆனால் எங்க வீட்டில் பிறந்த குழந்தைக்கு கூட யூஸ் பண்ணுவாங்க

Jaleela Kamal said...

ஆமாம் பாயிஜா விக்ஸ் யுஸ் பண்ண கூடாது என்கிறர்கள் நாங்க டைகர் பாம் தான் ஆனால் அது குழந்தைகளுக்கு எரியும் மண்டைய சுற்றி வலிக்கும் நான் குழந்தைகளுக்கு உடனே ஐஸ்தான் வைப்பேன், தலை முழுவதும் வலிக்கும், அதுக்கு ஆள் காட்டி விரல் பெருவிரலால் தைலத்தை நம் இரண்டு விரலாம் எடுத்து தேய்த்து கொண்டே இருந்தால் அது கை சூட்டில் உருகி எண்ணை போல் வரும் பிறகு தேய்க்கனும்.