Saturday, February 28, 2009

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு

1. தினமும் ஒரு பத்தை தேங்காயும், நான்கு பாதம் இரவே ஊறவைத்துகாலையில் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.

2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.

4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.

5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.

(தொடரும்)

தால்

தேவையான பொருட்கள்

வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்

செய்முறை

பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.


குறிப்பு:

பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.

ஜலீலா, துபாய்

குழந்தையின் ரிச் உணவு

தேவையான பொருட்கள்

ஆப்பில் - ஒன்று
பேரிச்சை - முன்று
நேந்திரம் பழம் - ஒன்று

செய்முறை


ஆப்பிலை நாலாக அரிந்து நடுவில் உள்ள கொட்டையை நீக்கவும்.
நேந்திரம் பழம் தோலுரித்து நன்காக கட் பண்ணவும்.
பேரிச்சையில் உள்ள கொட்டைகளை நீக்கவும்.
முன்றையும் இட்லி பானையில் அவித்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கொடுக்கவும்.

இதை ஒரு பவுளில் வைத்து குத்தாதா ஸ்பூனினால் அல்லது ஒரு விரலால் எடுத்து நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தடவவும்.
ஒரேயடியாக கொடுக்க கூடாது, இது நான்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம், பெரிய வளர்ந்த பிள்ளைகள் என்றால் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுகலாம்.
இது மிகவும் சத்தான உணவு.

ஜலீலா

குழந்தைகளின் டானிக்

உங்கள் குழந்தைகள் அமுல் பேபி போல் கொழு கொழு என்று ஆகனுமா இதோ இதை டிரை பன்ணுங்க



குழந்தைகளின் டானிக்


தேவையான பொருட்கள்
***********************

பொட்டு கடலை - ஐம்பது கிராம்
நாட்டு சர்க்கரை - இருபதைந்து கிராம்
பூவன் வாழைபழம் - இரன்டு

செய்முறை
*************
1. பொட்டு கடலையை கரியாமல் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
2. பொட்டுகடலை ஆறியதும் மிக்ஸியில் பொடித்துபொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதைலிருந்து இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து கொள்ள வேண்டியது.
3. அதில் நாட்டு சர்க்கரையை மன்னில்லால் எடுத்து கலக்கி பூவன் வாழைபழத்தை பிசைந்து கொடுக்கவும்.
4. நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதா சர்க்கரை போதும்.
5. இதை கொடுத்து கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கொடுங்கள்.


குறிப்பு:

ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டு கடலை ,சர்க்கரை, கொஞ்சம் மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமலும் கேட்கும்.
கொஞ்சம் சோம்பு சேர்த்து கொண்டாலும் வயிற்றுவலிக்கு கூட கேட்கும்.
இதை வழமையாக கொடுத்து வந்தால் உங்கள் குழந்தை அமுல் பேபி போல் கொழு கொழு என இருப்பார்கள்.



ஜலீலா

குழந்தைகளின் ஹெல்தி உணவு

தேவையான பொருட்கள்

பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று

செய்முறை

மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர்க்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாகா உருளை கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.


குறிப்பு:

பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்.

ஹெல்தி கஞ்சி

தேவையான பொருட்கள்


ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
பாதம் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
பிளெயின் குளுகோஸ் - முன்று தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக

செய்முறை


தண்ணீரில் பால்,பாதம் பவுடர்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் காய்ச்சி அதில் பால், குளுக்கோஸ் சேர்த்து கொடுக்கவும்.


குறிப்பு:

ஓட்ஸ்,பாதம் எல்லாம் திரித்து வைத்து கொள்ள வேண்டியது. பிள்ளைகளுக்கு உடம்புக்கு முடியாத போது செய்து கொடுக்கலாம்.


ஜலீலா

Tuesday, February 24, 2009

குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது

1.குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது ஒரு பெரிய வெள்ளை நாப்கின் (அ) காட்டன் துணியை கழுத்தில் கட்டி கொள்ளுங்கள்.

2. இல்லை என்றால் போட்டு இருக்கும் டிரெஸ் நஸ்தியாகும் அதுவும் இல்லாமல் விளையாடி விளையாடி சாப்பாடு தண்ணீர் எல்லாம் மேலெ கொட்டி சாப்பிடுவர்கள், நெஞ்சில் சளி கட்டும்.

3. இப்படி நப்கின் கட்டி கொண்டு பழக்கிட்டு அப்ப அப்ப தொடச்சிக்கொ என்று சொல்லி பழக்கனும் .கொடுத்து முடித்தும் அதை கழட்டி தனியாக அலசி போட்டு கொள்ளலாம்.

4.டிரெஸ் வீனாகாது ஒவ்வொரு முறை சாப்படு, ராகி செரிலாக் கொடுக்கும் போது இப்படி செய்யலாம்.

5.குழந்தைகள் துணியை துவைக்க தனியாக ஒரு சிறிய தொட்டி வைத்து கொள்ளுங்கள்.

ஜலீலா

குழந்தைகளுக்கு பேம்பருக்கு பதில்









1. குழந்தைகளுக்கு பேம்பருக்கு பதில் நேப்கின்னை பயன் படுத்துங்கள்.

2. அது வெள்ளை கலர் பெரிய சதுர வடிவ நாப்கீனை மடித்து வைத்து பிளாஸ்கிட் அதன் மேல் போடு ஜட்டியும் இருக்கிறது அதை பயன் படுத்தலாம்.



3. இதனால் தேவையில்லாத ரேஷிலிருந்து பாது காத்து கொள்ளலாம்.


4. ஒரு நாளைக்கு நான்கு இருந்தால் கூட போதும், மொத்தமா ஊறவைத்து துவைத்து கொள்ளலாம்.



5. படத்தில் காட்டியுள்ளபடி செய்து பயன் படுத்தவும்.





ஜலீலா

Wednesday, February 18, 2009

சில குழந்தைகள் சத்தி எடுத்து கொண்டே இருக்கும்

1 . சில குழந்தைகள் சத்தி எடுத்து கொண்டே இருக்கும்.அது பால் கொடுத்ததும் சரியா தட்டி ஏப்பம் விட வைக்காததால் தான் இப்படி சத்தி வரும்.

2. இல்லை தலையில் பேன் இருக்கான்னு பாருங்கள்.

3. நிறைய குழந்தைகள், எல்லாம் தூக்குவார்கள் அவர்களிடம் இருந்து ஒட்டி கொள்ளுங்கள்.

4. அப்படி சத்தி எடுக்கும் குழந்தைகளை தூக்கும் போதோ, மற்ற ஆண்கள் கையில் கொடுக்கும் போதோ கையோடு ஒரு பெரிய டவலையும் சேர்த்து கொடுங்கள்.

5. தோள் பட்டையில் போடும் போது அந்த டவலை போட்டு கொண்டு பிறகு ஏப்பத்துக்கு தட்டி கொடுங்கள்.

6. சத்தி எடுப்பது நல்லது சளி இருந்தால் வெளியாகும்.

ஜலீலா

Sunday, February 15, 2009

குழந்தை வளர்பும் உணவும்.

1. குழந்தை பிறந்து முன்று மாதங்களுக்கு தாய் பால் கொடுப்பது தான் சிறந்தது.
2. அப்ப கொஞ்சமா நன்கு காய்ச்சி ஆறிய வெண்ணீர் ஒரு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்.

3. குழந்தைகளுக்கு உண்வு தயாரிக்க தனியாக சாமான்களை பயன்படுத்தவும்.(வடிகட்டி, ஸ்பூன்,வெண்ணீர் போடும் பாத்திரம்)
குழந்தைகள் பாத்திரத்தை தேய்க்கவும் தனியாக சாமான் தேய்க்கும் நார் பயன் படுதவும்.

4. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்குகிறார்களோ அவ்வளவு உடம்பிற்கு ரொம்ப நல்லது.சும்மா கையில் தூக்கி தூக்கி அவரகள் உடம்பை குலைக்க கூடாது.

5. கீழே ஷீட்டில் டவலை விரித்து அதில் படுக்க வைத்து நல்ல கைய கால ஆட்ட விடனும்.

6. அது அவர்களுக்கானா உடற்பயிற்சியும் கூட.

7. தொட்டிலில் போட்டு ஆட்டி பழக்க படுத்தாதீர்கள்.

ஜலீலா
(தொடரும்)

குழந்தை வளர்பு

குழந்தை பிறந்ததுமே எல்லோருக்கும் சந்தோஷம் தான் ஆனால் வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு ஒன்னும் புரியாமல் இருப்பார்கள்.



அதற்கு எனக்கு தெரிந்த குழந்தையின் உண்வு வகைகளை இங்கு கொடுகக் இருக்கிறேன்.
இது என் இரண்டு பிள்ளைகளை வளர்த்த அனுபவமும்.

7 வருடம் பேபி கேர் பார்த்த அனுபவமும் இந்த பிலாக் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பேபி கேர் மூலம், பல குழந்தைகளுடன் பழகியதால் அதில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளுடன் பட்ட அனுபவத்தை தான் டிப்ஸ கொடுக்கிறேன்.



எல்லோரும் படித்து பயன் பெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
ஜலீலா