Friday, January 8, 2010

உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் எலும்பு வ‌லுவாக, புஷ்டியாக இருக்கனுமா?



குழந்தைகளுக்கு கோதுமை மாவு பரோட்டாவை பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து வாரம் ஒரு முறை ஊட்டி விடுங்கள்.
நல்ல சத்தான மஸ்தான ஆகாரம்.

இப்படி கொடுப்பதால் நல்ல தளதளன்னு கண்ணம் வைத்து ஷைனிங்காக இருப்பார்கள். இப்படி தொடர்ந்து கொடுத்து வருவதால் அவ‌ர்க‌ள் பெரிய வர்கள் ஆனாலும் எலும்பு ரொம்ப‌ வ‌லுவாக‌ இருக்கும்.

தேவையானவை



கோதுமை மாவு = கால் ட‌ம்ள‌ர்
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு மேசை க‌ர‌ண்டி
நெய் = அரை டீஸ்பூன்
உப்பு ‍= சிட்டிக்கை
ச‌ர்க்க‌ரை = கால் தேக்க‌ர‌ண்டி
மிள‌கு தூள் = ஒரு சிட்டிக்கை
பால்+ த‌ண்ணீர் சிறிது
நெய் + எண்ணை = ரொட்டி சுட‌ தேவையான‌ அள‌வு
பால் + ச‌ர்க்க‌ரை = ஊற‌வைக்க‌ தேவையான‌ அள‌வு



செய்முறை

கோதுமை மாவில் உப்பு ச‌ர்க்க‌ரை,மிள‌கு தூள் சேர்த்து நெய்யை உருக்கி ஊற்றி, சூடானா பால் + வெண்ணீரை இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி போதுமான‌து லேசாக‌ தெளித்து பிச‌றி ந‌ன்கு குழைத்து 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

பிற‌கு ப‌ரோட்டாக்க‌ளாக‌ கொசுவ‌ம் வைத்து ம‌டித்து வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ தேய்த்து லேய‌ராக‌ வ‌ரும் ப‌ரோட்டாக்க‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.

இர‌ண்டு சிறிய‌ ப‌ரோட்டாக்க‌ள் வ‌ரும்.

இதை நான் என் பைய‌னுக்கு ஆறு மாத‌த்திலிருந்து கொடுத்து இருக்கேன். ஆர‌ம்ப‌த்தில் கால் ப‌ரோட்டாதான் உள்ளே போகும் போக‌ ந‌ல்ல‌ விரும்பி சாப்பிடுவார்க‌ள்.


இனிப்பு பிடிக‌க‌த‌ பிள்ளைக‌ளுக்கு, பால் + கொஞ்ச‌மா குருமா ஊற்றி ஊற‌வைத்தும் கொடுக்க‌லாம்.

உங்க‌ளுக்கு ஆறு மாத‌த்தில் கொடுக்க‌ யோச‌னையாக‌ இருந்தால் எட்டு மாத‌த்திலிருந்து கொடுக்க‌லாம்.

ப‌ல் வ‌ள‌ர்ந்து க‌டித்து சாப்பிட‌ ஆர‌ம்பித்த‌தும் ப‌ருப்பு,கூட்டு, குழ‌ம்பு வ‌கைக‌ள் தொட்டு கொடுக‌க்லாம்.



மிள‌கு சேர்வ‌தால் ச‌ளி இருந்தாலும் க‌ட்டுப‌டும்.பொட்டு க‌ட‌லை, நெய், ச‌ர்க்க‌ரை, பால் சேருவ‌தால் ந‌ல்ல‌ புஷ்டி + ஷைனிங் வ‌ரும்.

8 comments:

Unknown said...

நீங்கள் சொல்வது போல் தான் என் மகளுக்கும் கொடுத்தேன். விரும்பி சாப்பிட்டால்

S.A. நவாஸுதீன் said...

பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய இடுகை. பாராட்டுக்கள் சகோதரி.

அண்ணாமலையான் said...

அவசியமான ஒன்று..

Jaleela Kamal said...

ரொம்ப சந்தோஷம் பாயிஜா என் டிப்ஸ் படி உங்கள் அஜ்ஹாராவிற்கு கொடுத்தது.

முன்பே தமிழ் குடும்பத்தில் போட்ட டிப்ஸ் தான்.

Jaleela Kamal said...

சகோதரர்கள் அண்ணாமலையான் மற்றும் நவாஸ் தவறாமல் என் பதிவுகளை படித்து கருத்து தெரிவிபப்தற்கு மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

சப்பத்தியைப் பாலில் ஊறவைத்து மிக்சியில் போட்டு நல்லா அடித்தும் குடுக்கலாமா?

Jaleela Kamal said...

வாங்க உழவன் வருகைக்கு மிக்க நன்றி

சப்பாத்தி நான் கொடுத்துள்ள அளவு களுக்கே நல்ல ஷாப்டாக வரும்.

அதுவும் பாலில் ஊறவைத்தால் இன்னும் நல்ல மெதுவாக குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட தோதுவாக இருக்கும்.

My Food Express said...

Assalamualaikum sis,
Happy to follow you and very useful information for new mom like me.My mom is no more and reading your blog and useful tips makes me really happy(jus the way my mom used to give tips and other advice)..Do include us in your duas


Jazakallah khair