Monday, January 11, 2010

தாய்மை ஒரு இனிய பயணம்.



கர்பிணி பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்


வாங்க தோழிகளே இங்கு ஒரு தோழி கர்பிணி பெண்களுக்காக தன்னுடைய அனுபவத்தை பதிவுகளாக போட்டு இருக்காங்க.
புதுசா கல்யாணம் ஆகப்போகிறவர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆகி குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பிலாக் உதவும்.

இன்று தான் இந்த பிலாக் என் கண்ணில் பட்டது

தாய்மை ஒரு இனிய பயணம் இதில் சென்று படித்து பயணடைந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்காவது யாருக்காவது ஏதாவது ஒரு முறையில் உதவனும்.
நான் இப்படி பதிவுகள் மூலம் உதவுகிறேன்.ரொம்ப சந்தோஷம்..
நிறைய வெளிநாட்டு பெண்கள் தளங்களில் முதல் கேட்கும் கேள்வி, இப்ப நான் கர்பமா இருக்கேன், இப்ப நான் என்ன சாப்பிடனும்,எப்படி இருக்கனும் என்ன செய்யனும் கேட்பார்கள்.
சிலருக்கு ரொம்ப நாள் கழித்து அனுபவங்கள் மறந்தே போய்விடும்.
இர‌ண்டு குழ‌ந்தைக்கு பிற‌கு முன்றாவ‌து குழ‌ந்தை இடைவெளி விட்டு பெறுவ‌ர்க‌ளூக்கு கூட‌ எல்லாமே புதுமையா இருக்கும் ஆனால் யாரிட‌மும் கேட்க‌ கூச்ச‌மாக‌ இருக்கும், அப்ப‌டியே கேட்டாலும் இர‌ண்டு பிள்ளைய‌ பெத்தாச்சு இது கூட‌ தெரியாதா என்பார்க‌ள்.
அப்படி கேட்கும் பெண்க‌ளுக்கு இந்த‌ தாய் மூல‌ம் பெண்க‌ளுக்கே உண்டான‌ இந்த‌ "தாயின் இனிய‌ ப‌ய‌ண‌த்தை" நீங்க‌ள் ப‌டித்த‌தோடு விட்டு விடாம‌ல் உங்க‌ளை சார்ந்த‌ அனைவ‌ருக்கும் இதை ப‌ற்றி சொல்லுங்க‌ள்.
இதை அழகான முறையில் பதிவு போட்ட "தாய்" வாழ்க‌!

7 comments:

Unknown said...

அக்கா ரொம்ப நன்றி.. எனக்கு இப்ப மிகவும் பயனுள்ளதாக இருக்கு.

M.S.R. கோபிநாத் said...

நல்லதொரு ப்ளாக். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. ஓட்டு போட்டாச்சு.

Jaleela Kamal said...

பாயிஜா எல்லோருக்கும் இப்ப‌டி உத‌வுவ‌து ம‌ன‌துக்கு ரொம்ப‌ ச‌ந்தோஷமாய் இருக்கு துஆ செய்யுங்க‌ள்

Jaleela Kamal said...

வாங்க‌ கோபி நாத் வ‌ருகைக்கும், க‌ருத்து தெரிவித்த‌மைக்கும்,ஓட்டு போட்ட‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி.

S.A. நவாஸுதீன் said...

சிறந்த பணியை செய்திருக்கின்றீர்கள். பல பேருக்கு இது உபயோகமாக இருக்கும்.

Thaai said...

Jaleela, thanks a lot for mentioning abt my blog here... glad it's of use to atleast a few... Will try to update the blog regularly...ippo kutti nadakka aarambichitta... so regularaa update pannuvadhillai... we get back soon...:)

Nandrigal pala...:)

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற பயனுள்ள இடுகைகளுக்குப் பாராட்டுக்கள்!

//இர‌ண்டு குழ‌ந்தைக்கு பிற‌கு முன்றாவ‌து குழ‌ந்தை இடைவெளி விட்டு பெறுவ‌ர்க‌ளூக்கு கூட‌ எல்லாமே புதுமையா இருக்கும் //

நீங்க இந்தியாதானா??? மூன்று குழந்தைகள் வேண்டுமா என்பதைப் பற்றிய இடுகையும் போடுங்கள். பாவங்க இந்தியா.. தாங்காது :-)