Monday, July 6, 2009

சமைய‌ல‌றையில் குழ‌ந்தை








குழந்தைய கையில் வைத்து கொண்டு சமைக்காதீர்கள்.
அது பெரும் ஆபத்து.
அதுவும் போன் காதில், ஒரு கையில் குழந்தை, ஒரு கையில் கரண்டி இதேல்லாம் ரொம்ப வே ஆபத்தில் முடியும்.
கொஞ்சம் குழந்தை எகிறினாலும், நிலைமை ரொம்பவே மோசம்.அதே போல் தூக்க கலக்கத்திலும் போய் பால் காய்ச்சாதீர்கள்
.







எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு 10 வருடம் முன். காலையில் தூக்கத்தில் போய் பாலை காய்ச்சி என்று புரியமல் தன் வயிற்றில் கொட்டி கொண்டு வயிறு, தொடை எல்லாம் பொத்து கொண்டது.ஃப்பார்மசியில் ஒரு கீரிமை வாங்கி தடவினார்கள்.
அது ஆண்களுக்கு கொடுக்கும் ஆயிண்மெண்டாம், பெண்களுக்கும் , ஆண்களுக்கும் அவர்கள் சருமத்திற்கு ஏற்றவாரு மருந்துகள் இருக்கும்.அந்த‌ ஆயிண்ட்மெண்ட் போட்ட‌தில் மேலே எல்லாம் மீண்டும் கொப்புள‌ம் அதிக‌மாகி விட்ட‌து.டாக்ட‌ர் கிட்ட‌ போனால் போலீஸ் கேஸாகிடும் என்று ப‌ய‌ந்து அந்த‌ பெண் வீட்டிலேயே இர‌ண்டு மாத‌மாக‌ டிரெஸ்ஸும் போட‌ முடியாம‌ல், குழ‌ந்தைக்கு வெரும் ரெடிமேட் புட் அவ‌ங்க‌ ஹ‌ஸு காலையில் வைத்து விட்டு போகும் நூடுல்ஸுமா க‌ழித்தார்க‌ள்.
இன்னொரு அறையில் பேச்சுலர் தங்கி இருந்ததால் பாத்ரூமும் போக முடியாமல்.ரொம்பவே அவஸ்தை பட்டுள்ளார். பிள்ளைக்கு காலையில் இருந்து இர‌வு பேம்ப‌ரும் மாற்ற‌ முடியாம‌ல் த‌வித்தார்க‌ள்.கேட்டு விட்டு ரொம்ப‌ க‌ல‌ங்கி போய் விட்டோம். எல்லாம் ச‌ரியான‌ பிற‌கு தான் என‌க்கு தெரிந்த‌து, போய் பார்த்து வ‌ந்தோம்.



அப்படி வேற வழியில்லை என்கிற போது கண்ணெதிரில் நிறைய சாமான்கள் கொடுத்து விளையாட விட்டு வேலை பாருங்கள்.
இல்லை டைம் பிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் இந்த நேரத்திற்குள் வேலைய முடிக்கனும் என்று.




குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு தனி அறையில் விடாதீர்கள்.தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடுவார்கள்.ச‌மைக்கும் முன் குழ‌ந்தையை குளிக்க‌வைத்து வயிற்றை நிறைத்து தூங்க‌ வைத்தால் க‌ண்டிப்பாக‌ ஒரு ம‌ணி நேர‌மாவ‌து தூங்குவார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் கூட‌ ச‌மைய‌லை முடிக்க‌லாம்.









வேலையை சுலபமாக்க இரண்டு நாளைக்கு சேர்த்து சமைத்து கொள்ளுங்கள்.
அல்லது கணவர் வீடடில் இருக்கும் போது மற்ற வேலைகளை முடித்துக்கொள்ளுங்கள்.















நிறைய பேர் இப்போது இப்படி தான் சமைக்கிறார்கள் பத்த குறைக்கு சாட்டிங் வேறு.இத பெருமையா வேற சொல்லி கொள்வது குழந்தைய கையில் வைத்து கொண்டு தான் சமைத்து கொண்டே பேசுகீறேன் என்று..
எல்லாம் பட்டு விட்டு பின்னாடி அவஸ்தை படுவதை விட பிளான் பண்ணி வேலைகளை முடிப்பது நல்லது, இதனால் ஆபிஸில் கணவருக்கும் நிம்மதி போகும். லீவு போடவேண்டிவரும்.உடலளவில் பெரும் பாதிப்பு வேறு ஏற்படும்.





19 comments:

SUFFIX said...

As usual நல்ல பதிவு, எப்படித்தான் யோசிக்கிராங்களோ. இதற்க்காகத்தான் பொறுப்பான அப்பாக்களாக நாங்கள் அடுப்பங்கரை பக்கம் அதிகமாக போகாமல் தாய்க்குலங்கள் சமைக்கும்போது குழந்தைகளுடன் விளையாடி உங்களின் stressஐ குறைக்கின்றோம். இப்பவாவது புரியுதா?

Jaleela Kamal said...

அது சரி ஹா ஹா ஹா

பிறகு பதில் போடுகீறேன்

S.A. நவாஸுதீன் said...

குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பது மிகச்சரியே. நீங்கள் சொன்ன விஷயங்கள் நிச்சயம் எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டியவைதான்.

Menaga Sathia said...

நல்ல பதிவு ஜலிலாக்கா,என் பொண்ணை ஹைசேர்ல உட்கார வைத்து கையில் விளையாட்டு பொருளை குடுத்துக்கிட்டே தான் சமைக்கிறேன்.

Jaleela Kamal said...

ஷ‌பி சில‌ அப்பாக்க‌ள் தான் அப்ப‌டி ,

ஆனால் சில‌ பேர் அதுவும் உத‌வுவ‌தில்லை, சில‌ பேர் ஆபிஸில் ஏசியில் உட்கார்ந்து தான் வேலை பார்த்து விட்டு வ‌ருகிறார்க‌ள்,
அதென்ன‌வோ மூட்டை தூக்கிடு வ‌ந்த‌ மாதிரி ஒரு ஒரே டீ வி பார்ப்ப‌தும், க‌ம்பியுட்ட‌ரில் அதிக‌ நேர‌த்தை செல‌விடுவ‌துமாக‌ இருக்கிறார்க‌ள்.

என்ன‌ வோ வீட்டு வேலைக‌ள் பெண்க‌ளுக்கு என்று தான் எழுத‌ ப‌ட்ட‌து போல்.
இப்ப‌ சீரிய‌ல் வேறு பெண்க‌ளை விட‌ ஆண்க‌ளுக்கு தான் ரொம்ப‌ மோக‌ம் ஜாஸ்தி யாகிவிட்ட‌து.


சில இடத்தில் உள்ள ஏமாந்த ஆண்கள் பெட் காப்பி போட்டு வைத்து விட்டு போகிறார்கள்

கை குழ‌ந்தை என்று இருந்தால் வேலை ரொம்ப‌ அதிக‌மாக தான் இருக்கும். அத‌ற்கேற்றார் போல் த‌ம்ப‌திக‌ள் அட்ஜெஸ்ட் ப‌ண்ணி விட்டு கொடுத்து வாழ்ந்தால் எல்லாத்தையும் ந‌ல்ல‌ ப‌டியாக‌ ச‌மாளிக்க‌லாம்.


இன்னும் மேலே உள்ள‌ டிப்ஸில் ஒரு விள‌க்க‌ம் தான் கொடுத்துள்ளேன், இன்னும் ப‌ல‌ இருக்கு பார்க்க‌லாம் நேர‌ம் கிடைக்கும் போது போடுகிறேன்.

.

Jaleela Kamal said...

நவாஸ் எல்லோரும் பிளாக் வைத்துள்ளார்கள் ஒவ்வொருத்தர் மூலமாக இதுபோல விஷியங்கள் சென்றடைந்தால் சந்தோஷம் தான்.

இங்கு வந்த புதிதில் தனியா நாள் முழுவதும் உட்கார்ந்து என்ன செய்வது என்று தெரியவில்லை வேலை சீக்கிரம் முடிந்தாலும்.இந்தியாவில் இருந்தால் தைத்தாவது பணம் ஈட்டலாம்.

இப்படி ஒரு ரூமில் அடைந்து கிடக்கிறோமே என்று ஒரு தலைவலி..

பிறகு தான் ஆறு மாதம் கழித்து பேபி கேர் ஆரம்பிச்சு 7 வருடம் நல்ல போச்சு ஆனால் ரொம்ப கழ்டம் தான் இருந்தாலும் பல வகை குழந்தைகள் பல அனுபவங்கள்.
விஷிய‌ம் போட‌ நிறைய‌ இருக்கு ஆனால் இன்று என்ன‌ தோன்றிய‌தோ அதை ம‌ட்டும் போட்டேன்.

Jaleela Kamal said...

மேனகா நீங்கள் செய்வது சரிதான்.

நானும் இரண்டு பையன் களையும் வைத்து கொன்டு தான் காலையில் டிபன், சாப்பாடு கட்டி கொடுத்து இருக்கேன்.

ஊரில் ஒரு பெரிய தேச் ஷா இருக்கும் அதில் உட்காரவைத்து வேலை செய்வேன்,
இங்கு சின்ன தா இருந்த வரை பிராமில் போட்டு வீடு துடைக்கும் போது நல்ல பாட்டை போட்டு கொண்டு உயரமான இடத்தில் உட்காரவைத்து கொண்டு துடைப்பது.

குழந்தைகள் இருக்குமிடத்தில் கத்தி மற்றும் கூர்மையான அயிட்டத்தை அவர்கள் கண்ணில் படாமல் வைக்கனும்.


அவ‌ர்க‌ள் எதை எடுத்தாலும் நேரா வாயில் தான் கொண்டுபோய் வைப்பார்க‌ள்.

SUFFIX said...

//என்ன‌ வோ வீட்டு வேலைக‌ள் பெண்க‌ளுக்கு என்று தான் எழுத‌ ப‌ட்ட‌து போல்.
இப்ப‌ சீரிய‌ல் வேறு பெண்க‌ளை விட‌ ஆண்க‌ளுக்கு தான் ரொம்ப‌ மோக‌ம் ஜாஸ்தி யாகிவிட்ட‌து.//

அப்படி இருப்பதர்க்காக அவர்களை வன்மையாக கன்டிக்கின்றோம்.

//சில இடத்தில் உள்ள ஏமாந்த ஆண்கள் பெட் காப்பி போட்டு வைத்து விட்டு போகிறார்கள்//

இப்படி அபான்டமாக "ஏமாந்த" என்று கூறியதர்க்காக....என்னத்தே சொல்ரது

Jaleela Kamal said...

ஹா நாட்டில் இப்ப நடக்கிற உண்மை தா சொல்கிறேன்.

பெட் காப்பி போட்டு கொடுத்ததும் மதியம் என்ன ஆ ஆ எல்லாம் ஆச்சு மெஸுல சொல்லிட்டேம்மா வந்துடும். என‌க்கு இத‌ எழுதும் போது சிரிப்பு தான் வ‌ருது, என்ன‌ங்க‌ அப‌ப்டியே அந்த‌ ரீமோட்டை எடுத்து கொடுத்துட்டு போங்க‌...

காலையில் இப்ப‌ என்ன‌ என்ன‌ சீரிய‌ல் ஓடுதுன்னு தெரிய‌ல‌ ம‌திய‌ம் 1.30 வ‌ரைக்கும் அத‌ பார்த்து வெங்காய‌ம் ந‌ருக்கும் போது க‌ண்ணில் த‌ண்ணி வ‌ருதோ இல்லையோ இத‌ பார்த்து ஒரே மாலை மாலையா வ‌டிக்கிற‌து..



ஆகா கொடுத்து வச்ச மகராசி தான்.

SUFFIX said...

ஆஹா!! புரிஞ்சுடுச்சு, நீங்க உன்மையிலேயே கொடுத்த வச்ச மகராசி தான்‌

Jaleela Kamal said...

நான் எங்காவது நான் சொன்னேனா? பார்த்த கேட்ட, சிலர் என்னிடம் வந்து நொந்து சொன்ன விஷியங்கள்.


எனக்கு தூங்கவே நேரம் கிடைக்க மாட்டுங்கிறது.


ஷபி மேலே படத்தை பாருங்கள்.

ஒரு ஆண் சமைப்பது = இது காலையில் பெட் காபி குடித்து கொண்டு இருக்கும் பெண்கள்.


இன்னொரு படத்தில் ஒரு பெண் குழந்தைய‌வைத்து கொண்டு சமைப்பது இது கால் மேல் கால் போட்டு கொண்டு இன்னும் இந்த கால கட்டத்திலும்.
அதிகாரம் பண்ணும் ஆண்களும், மாலை சீரியல் பார்க்கும் ஆண்களும்...



ஆனால் இது வரை ஒகே வருங்கால ஆண் பிள்ளைகள் பாடு, அதுவும் காதலிக்கும் ஆண் பிள்ளைகள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் நிரந்தர கூஜா தான்..

SUFFIX said...

ஆமாம் படத்தையும் கவனிச்சேன், ஒரு முடிவோடத்தான் ஆம்பிளங்களையும் கிச்சனில் இறக்கி விட்டு இருக்கீங்க, நானும் அவ்வபோது கிச்சன் கிங் ஆவது உண்டு, நிஜமாலேத்தானுங்கோ.

Jaleela Kamal said...

ரொம்ப நல்லது (வ‌டிவேலு மாதிரி படிச்சிக்கோங்கோப்பு = அப்ப‌ நீங்க‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ புருஷ‌ன் தான் உங்க‌ ம‌னைவிக்கு)

அம்மா மார் ஆண்பிள்ளைகளை வேலையெ ஏவமாட்டார்கள், ஆனால் பெண் பிள்ளைகளை மட்டும் இன்னொரு வீட்டில் போய் சமைக்கனும் வேலை பார்க்க சொல்வாங்க காலம் மாறி போச்சு

இப்ப ஆண் பிள்ளைகளுக்கு தான் டிரெயினிங் கொடுக்கனும் போல.

SUFFIX said...

ஒரு நாளைக்கு "ஷபியின் சிக்கன் ஜிகர்தன்டா" (பேரை பார்த்து பயந்துடாதிங்க) எப்படி செய்வதுன்னு பதிவுல போடுறேன்..ஹா..ஹா..ரிஸ்க் எடுக்கின்றேனோ?

Jaleela Kamal said...

உங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல் ஆச்சே.

சரி சரி அது என்ன சிக்கன் ஜிகர் தண்டா...போடுங்க‌ போடுங்க‌ ஆனால் ஒரு வார‌ம் தான் நான் ஊருக்கு போறேன்..

SUFFIX said...

//சரி சரி அது என்ன சிக்கன் ஜிகர் தண்டா...போடுங்க‌ போடுங்க‌ ஆனால் ஒரு வார‌ம் தான் நான் ஊருக்கு போறேன்..//

நல்ல படியா போய்விட்டு வாங்க, இப்படியெல்லாம் அர்ஜன்ட்டா போட்டா "ஜிகர் தன்டா" கீரை போன்டா லெவலுக்கு வந்துரும். ..முயற்சி செய்கிறேன்.

prabhadamu said...

சூப்பர். ஜலீலாக்கா மிக நல்ல தகவல். எல்லோருக்குமே தேவையான தகவல்.

mohamedali jinnah said...

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
காட்சி கெடு த்திடலாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
பேதமை அற்றிடும் காணீர்.

------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
தொழுது வர துவா செய்கின்றேன்.
-அன்புடன் -
அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,

தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,

இஸ்லாமிய ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

Jaleela Kamal said...

பிரபா வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி,

எப்படி இருக்கீங்க, நல்ல இருக்கீங்களா?