1. குழந்தைகளுக்கு பால் சாதம் கொஞ்சம வாழைபழம் சேர்த்து ஆறு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறையாவது கொடுத்து பழகவும்.
2. அதே போல் தயிர் மற்றும் மோர் சாதமும் எட்டு மாதத்திலிருந்து கொடுத்து பழகவும்.
3. தயிர் மோர் புளிப்பில்லாததாக இருக்கனும். தயிர் சதம் செய்யும் போது பால் முக்கால் பாகமும், தயிர் கால் பாகமும் சேர்த்து செய்து கொடுக்கவும்.
இது சாப்பிட ஈசியாக இருக்கும்.
4. குழந்தைகள் ஓடி ஆடி அங்க இங்க இடித்து கீழே விழுந்தால் வாயில் அடி பட்டு சாப்பிட முடியாது இது போல் காரம் இல்லாததாக இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
5. வயிற்று போக்கு சமையத்திலும் இந்த சாப்பாடு கொடுக்கலாம். சில பேருக்கு அந்த நேரத்தில் என்ன கொடுப்பது என்றே தெரியாது.
6. இப்படி கொடுப்பதால் உடல் சூடும் தனியும், தயிர் மற்றும் மோர் சாதம் மதியமும், பால் சாதம் இரவும் கொடுக்கலாம்.
ஜலீலா
5 comments:
ungalin anaithu tips sum migavum arumai, ovaru tips sum migavum usefulla ga irruku..
மிக்க நன்றி பாயிஜா.
ஜலீலா
ஜலீலாக்கா என் பையனுக்கு 2 வயசு தயிர்,மோர்,பால்சாதம் எதுவும் சாப்பிட மாட்டேங்குறான்,நாங்கள் இருவரும் மேக்ஸிமம் எல்லாத்திலையும் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கு,ஆனா இவனுக்கு ஊட்டினால் சாப்பிடவே மாட்டேங்குறான்,தயிரை வாயில வெச்சாலே வாந்தி பண்ணிடுறான், என்ன செய்ய அக்கா.
கவி சில குழந்தைகளுக்கு அப்படி தான் , வாந்தி வரும், பிடிக்காது அதுக்கு இப்ப அருசுவையில் கொடுத்த இனிப்பு மோர் செய்து கொடுத்து பாருங்கள், பிறகு மேங்கோ லஸ்ஸி செய்து கொடுங்கள்.
கறி, சிக்கன் எல்லாம் தக்காளிக்கு பதில் தயிர் சேர்த்து செய்து கொடுங்கள்.
நன்றி ஜலீலாக்கா,நான் ட்ரை பன்றேன்.
Post a Comment