
குழந்தைகளுக்கு கோதுமை மாவு பரோட்டாவை பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து வாரம் ஒரு முறை ஊட்டி விடுங்கள்.
நல்ல சத்தான மஸ்தான ஆகாரம்.
இப்படி கொடுப்பதால் நல்ல தளதளன்னு கண்ணம் வைத்து ஷைனிங்காக இருப்பார்கள். இப்படி தொடர்ந்து கொடுத்து வருவதால் அவர்கள் பெரிய வர்கள் ஆனாலும் எலும்பு ரொம்ப வலுவாக இருக்கும்.
தேவையானவை
கோதுமை மாவு = கால் டம்ளர்
பொட்டு கடலை பொடி = ஒரு மேசை கரண்டி
நெய் = அரை டீஸ்பூன்
உப்பு = சிட்டிக்கை
சர்க்கரை = கால் தேக்கரண்டி
மிளகு தூள் = ஒரு சிட்டிக்கை
பால்+ தண்ணீர் சிறிது
நெய் + எண்ணை = ரொட்டி சுட தேவையான அளவு
பால் + சர்க்கரை = ஊறவைக்க தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவில் உப்பு சர்க்கரை,மிளகு தூள் சேர்த்து நெய்யை உருக்கி ஊற்றி, சூடானா பால் + வெண்ணீரை இரண்டு மேசை கரண்டி போதுமானது லேசாக தெளித்து பிசறி நன்கு குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு பரோட்டாக்களாக கொசுவம் வைத்து மடித்து வட்டவடிவமாக தேய்த்து லேயராக வரும் பரோட்டாக்களாக சுட்டெடுக்கவும்.
இரண்டு சிறிய பரோட்டாக்கள் வரும்.
இதை நான் என் பையனுக்கு ஆறு மாதத்திலிருந்து கொடுத்து இருக்கேன். ஆரம்பத்தில் கால் பரோட்டாதான் உள்ளே போகும் போக நல்ல விரும்பி சாப்பிடுவார்கள்.
இனிப்பு பிடிககத பிள்ளைகளுக்கு, பால் + கொஞ்சமா குருமா ஊற்றி ஊறவைத்தும் கொடுக்கலாம்.
உங்களுக்கு ஆறு மாதத்தில் கொடுக்க யோசனையாக இருந்தால் எட்டு மாதத்திலிருந்து கொடுக்கலாம்.
பல் வளர்ந்து கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் பருப்பு,கூட்டு, குழம்பு வகைகள் தொட்டு கொடுகக்லாம்.
மிளகு சேர்வதால் சளி இருந்தாலும் கட்டுபடும்.பொட்டு கடலை, நெய், சர்க்கரை, பால் சேருவதால் நல்ல புஷ்டி + ஷைனிங் வரும்.