Wednesday, December 16, 2009

குழந்தைகள் திடீரென்று அழுதால்



1. குழந்தைகள் திடீரென்று அழுதால் ஏதாவது பூச்சி கடித்திருக்கும். குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. அதில் பூச்சி , எறும்பு இருந்தால் உடனே தெரியும்.


2. உடனே பக்கத்தில் உள்ள அனைத்து துணிகளையும் நல்ல உதரி போடுங்கள். ஏதும் எறும்பு இருக்கான்னும் பார்க்கவும்.


3. காசு சில்லரை காசுகள் குழந்தைகள் உள்ள இடத்தில் ஆங்காங்கே வைக்காதீர்கள். அது போல பெரிய குழந்தைகளிடம் காசு கொடுத்தாலும் குழந்தைகளிடம் கொடுத்து விளையாட கொடுப்பார்கள். இதனால் குழந்தைகள் அதை எடுத்து வாயில் போட்டு கொண்டால் பல விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கு.


4. வயிற்று வலியா இருந்தாலும் அழுவார்கள், அதற்கு வயிற்றில் எண்ணை தடவிவிட்டு, கொதித்து ஆறிய வெண்ணீரை பாலைடயிலோ (அ) ஸ்பூனாலோ ஊற்றி விடுங்கள் கொஞ்சம நேரத்தில் சரியாகிடும்.


5. ஆகையால் தான் நல்ல சப்போட் கொடுத்து அடக்கமா தூங்க வைத்து அழக்குங்கள்.








6. ஒரே தூக்கி பழக்க படுத்தி கையிலேயே வைத்து தூக்கி பழக்க படுத்தியவர்கள் கொஞ்சம் அவர்களை விட்டு நகர்ந்தாலும் உடனே வீல்லென்று சத்தம் வரும்.



7. அடுத்து அடுத்து இரண்டு குழந்தை உள்ள வீட்டில் பெரிய குழந்தை கூட சின்ன குழந்தையையே கொஞ்சுகிறார்களே என்ற பொறாமையில் கைய கால கூட இழுத்து விட்டு விடுவார்கள்.அதையும் ஜாக்கிரதையா கண்காணிக்கனும்.



8. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கு கிறார்களோ அவ்வளவு நல்லது. அதற்குன்னு வயிற்றுக்கு கொடுக்காமல் அப்படியே விடக்கூடாது. ஒரு மணி நேர்த்திற்கு ஒரு முறை பார்த்து காலை சுரன்டி விட்டால் (அ) காது மடலை லேசாக தொட்டால் கொஞ்சம் எழுந்திருப்பர்கல் வயிற்றை நிறைத்து மறு படி ஏப்பம் விட வைத்து தூங்க போடவும்.



9. பாத்ரூம் (ஒன், டு) போய் விட்டால் கூட அழுவார்கள் அதையும் அப்ப அப்ப செக் பண்ணி மாற்றி விடுங்கள்.



10. குழந்தைகளை பேனுக்கு நேரா படுக்க வைக்காதீர்கள்.எப்போதும் கொஞ்சம் சரிவலாக படுக்க வையுங்கள்.அப்படி நேராக படுக்க வைத்தால் நெஞ்சின் மேல் ஒரு டவலை மடித்து மேலே வையுங்கள்.
//இது சுதாகர் சார்( பித்தனைன் வாக்கு) பின்னூட்டத்தில் சொன்னது இதையும் சேர்த்துள்ளேன். இந்த டிப்ஸ் சிலருக்கு பயன் படும்.//
நல்ல கருத்துக்கள். நல்ல தகவல்கள். நன்றி ஜெலில்லா. ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. அதுவும் இணைத்து விடுங்கள். பெரும்பாலும் குழந்தைகள் வயிறு உப்புசம் அல்லது வாயுவினால் வயிறு வீக்கம் கண்டு கூட அழுவார்கள். அப்போது அவர்கள் வயிற்றை அமுத்திப் பார்த்து, நல்ல எண்ணெய் அல்லது உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் அல்லது ஓமத்தண்ணீர் கொடுத்து, வயிற்றை ஏப்பம் விடும் வரை தடவிக் கொடுக்கவும். அம்மாவின் ஆகாரக் கோளாறினால் பிள்ளைக்கு இந்த சங்கடம் வரும். நன்றி.

9 comments:

S.A. நவாஸுதீன் said...

பெற்றோர்களின் கவனத்திற்கு தேவையான நல்ல பகிர்வு

அண்ணாமலையான் said...

குழந்தைகள் தினமும் பிறந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால் தேவையான பதிவுதான்.

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை

Vasanth said...

good post. keep doing the good work. can u please fix the font color or background color. It kinda hard to read...

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். நல்ல தகவல்கள். நன்றி ஜெலில்லா.
ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. அதுவும் இணைத்து விடுங்கள்.
பெரும்பாலும் குழந்தைகள் வயிறு உப்புசம் அல்லது வாயுவினால் வயிறு வீக்கம் கண்டு கூட அழுவார்கள். அப்போது அவர்கள் வயிற்றை அமுத்திப் பார்த்து, நல்ல எண்ணெய் அல்லது உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் அல்லது ஓமத்தண்ணீர் கொடுத்து, வயிற்றை ஏப்பம் விடும் வரை தடவிக் கொடுக்கவும். அம்மாவின் ஆகாரக் கோளாறினால் பிள்ளைக்கு இந்த சங்கடம் வரும். நன்றி.

மகா said...

எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி .....

Jaleela Kamal said...

நன்றி நவாஸ்


ஆமாம் அண்ணாமலயான் எல்லோருக்கும் தேவையான பதிவு

வருக Nidurali வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Thank you for coming vk 2008, ok i will change the font colour.

சுதாகர் சார் கண்டிப்பாக உங்கள் டிப்ஸையும் சேர்த்து விடுகிறேன்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

மகா இந்த டிப்ஸ் உஙக்ளுக்கு உதவுவது குறித்து மிக்க மகிழ்சி. வருகைக்கு மிக்க நன்றி

உம்மு ஹாஜர் said...

நல்ல தகவல்கள் நன்றி அக்கா

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி உம்மு ஹாஜர்