Monday, July 13, 2009

குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?





குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?


வெளி நாடுகளில் காற்றோட்டம் கிடையாது 24 மணி நேரமும் ஏசி உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் கண்ணுக்கு தெரியாத தூசிகள் நிறைய வீட்டுக்குள்ளேயே நிறைய் இருக்கும்.









குழந்தைகள் தவழும் வயதில் கீழே இரக்கி விட்டதும் முதலில் அவர்கள் ஓடி போய் ஒளிவது கட்டில், சோபா, சேர் அடியில் தான்அவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களும் அங்கு தான் போய் சேரும் அதை எடுக்க செல்வார்கள், அங்குள்ள தூசியை முகர்ந்து கொண்டு வருவதால் தான் வீசிங் ஏற்படுகிறது.








இப்படி தான் ஒருவர் வீடு காலி பண்ணிட்டு ஊருக்கு போவதா இருந்தாங்க குழந்தைக்கு ஆறு மாதம். எல்லா சாமனையும் பேக்கிங் செய்து கொண்டு இருக்கும் போது பெட்டின் அடியில் உள்ள பெட்டி எடுத்து அந்த இடம் காலியாக இருக்கவே அந்த குழந்தை உள்ளே ஓடி ஓடி விளையாடி ஒளிந்து விளையாடி கொண்டு இருந்தது. இரண்டு நாள் கழித்து அந்த பையனுக்கு நிலைமை மோசமாகி முச்சு திணறி நெபுலைசர் வைக்கும் நிலை பாவம் வீடும் காலி பண்ணனும், ஊருக்கு கிளம்பனும், காலை மாலை மாற்றீ மாற்றி போய் நெபுலைசரும் வைத்து விடனும், அந்த பொண்ணு ரொம்பவே தவித்து போய் விட்டாள்.
க‌டைசியில் இர‌வு ப‌யண‌ம், உள்ளே போனா பிளைட்டில் ஏற்ற‌ மாட்டேன் அந்த‌ நெபுளைச‌ர் மிஷினோடு வ‌ந்தால் தான் ஏற்றுவேன் என்று சொல்லி விட்டார்க‌ள்.அந்த‌ ராத்திரியில் கூடே போன‌வ‌ர்க‌ள் அலைந்து திரிந்து வேறு ஏதோ ஒரு சாத‌ம் வாங்கி வ‌ந்து போய் ஊருக்கு போய் சேர்ந்தார்க‌ள்.
ஆனால் இன்னும் அந்த‌ பைய‌னுக்கு ட‌ஸ்ட் ப‌க்க‌ம் போனால் , குளிர் கால‌த்தில் வீசிங் வ‌ருகிற‌து.
எந்த‌ வேலை பார்த்தாலும் குழ‌ந்தை மேல் எப்போதும் ஒரு க‌ண்ணு வைத்து கொண்டே இருங்க‌ள். வீட்டையும் சுத்த‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து, சில‌ரால் முடியாது.நேர‌த்தை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தி வேலைக‌ளை பிரித்து செய்தால் எல்லாம் ச‌ரியாக‌ அமையும்.

Saturday, July 11, 2009

அண்ணா தம்பி , ஹனீப்





முன்று பேரும் சேர்ந்து ஒரே கம்புட்டரில் கேம், அதுக்கு கண்ணு இருந்த அது கூட அழுதிருக்கும்.























ப‌ச்ச‌ குழ‌ந்தை என்றாலே எல்லோருக்கும் ஆசை தான் /

ஆண்டி ஆண்டி நான் கொஞ்ச‌ம் நேர‌ம் வைத்து கொள்கிறேன்.என் பைய‌ன் ஹ‌னீப் சொன்னான். ம‌டியில் வைத்த‌து ச‌ந்தோஷ‌ம் தாங்க‌ல‌ அத‌ நான் போட்டோ வேறு எடுப்ப‌தால் ஒரு சிரிப்பு + போஸ் வேறு க‌ண்ணை விரித்து கொண்டு...
அடுத்து அண்ணா த‌ம்பி இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேருடைய‌ பேச்சுக்க‌ளை சொன்னால் சொல்லி கொண்டே போக‌லாம்.

அவ‌ர்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் கூப்பிட்டு கொள்வ‌தே அண்ணா ஆ ஆஆ
த‌ம்பி பீ பீ பீ என்று தான் அது வீட்டுக்கு வ‌ர‌ எல்லோருக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.



உட‌னே ஹ‌னீப் த‌ம்பிய‌ வ‌ச்சுக்குறான், த‌ம்பி வா குட்டி த‌ம்பிய‌ வ‌ச்சு போட்டோ எடுதுக்க‌லாம்.




த‌ம்பிக்கு த‌லைவ‌லிக்கு தான் ஆஃப்தாப் கொஞ்ச‌ம் தைல‌ம் தேச்சு விடுமா.. என் த‌ங்கை சொல்ல‌ உட‌னே த‌ம்பீ இங்க‌ வா தைல‌ம் தேய்க்கிறேன்.
உட‌னே த‌ம்பி ப‌டுத்து கொண்டே நீ வேணும்நா இங்க‌ வ‌ந்து த‌ட‌வி விடு....
சின்ன‌துக்கு ரொம்ப‌வே குசும்பு ஜாஸ்தி....
அடுத்து லைட் போட்டா குட்டி த‌ம்பி முழித்து விடுவான் போய் கொஞ்ச‌ம் த‌ண்ணீ கொண்டு வாம்மா...
ச‌த்தமா த‌ம்பீ குட்டி த‌ம்பி தூங்குறா போ போய் த‌ண்ணீ கொண்டு வா,
க‌டைசியில் இரண்டும் இருட்டில் போக‌ ஒரு டார்ச் ந‌ல்ல‌ வெளிச்ச‌மா போட்டு கொண்டு ந‌ல்ல‌ குழ‌ந்தை முக‌த்தில் அடித்து கொண்டு த‌ண்ணிய‌ கொடுத்தார்க‌ளாம்.






Friday, July 10, 2009

குழந்தைக்கு மசாஜ் மற்றும் ஆயில் பாத்




1. முதலில் ஒரு இரண்டு மூன்று பெரிய பேப்பர் எடுத்து கொண்டு அதில் குழந்தையை படுக்க வைத்து எண்ணையை தடவுங்கள்.துணியில் என்றால் எண்ணை பிசுப்பாகிடும். அதை துவைக்க நேரம் எடுக்கும்.

2. தலைக்கு சிறிய தலையனை (அ) டர்கி டவலை நான்காக மடித்து தலைக்கு வைத்து கொள்ளுங்கள்.

3.ஜான்சன்ஸ் பேபி ஆயில் (அ) ஆலிவ் ஆயில் தேய்த்து மெதுவாக பூவை தொடுவது போல் மசாஜ் செய்யுங்கள்.இப்படி செய்வதால் கால் முட்டி, நரம்புகள் வலுவடையும்.15 நிமிடம் ஊறினால் போதும் உடனே வெது வெதுப்பான நீரில் குளிக்கவையுங்கள்.குளிக்க கொண்டு செல்லும் போதே உங்கள் தோள் பட்டையி டவல் இருக்கட்டும்.குளிக்க வைத்து உடனே தோள்பட்டையில் உள்ள டவல் மேல் போட்டு அபப்டியே மூடி கொண்டு போய் பெட்டில் போடு நன்கு துடைக்கவும்.பேனை ஆஃப் பண்ணிவிடவும்.

4. இப்போது நல்ல வயிற்றை நிறைத்து , ஏப்பம் விட விட்டு பெரிய டவல் கொண்டு நன்கு இரண்டு கைபுறம், கால் புறம் சேர்த்து கட்டுவது போல் கொண்டு வந்து பெட்டில் நாலா பக்கமும் தலையன் வைத்து தூங்க வையுங்கள்.(ஓவ்வொரு முரை பால் கொடுக்கும் போதும் நீங்கள் சூடான பானம் ஏதாவது குடித்து கொள்ளுங்கள்.(சூப், ஹார்லிக்ஸ், பால்,போஸ்ட், போன்வீட்டா, ராகி, அல்ல்து வெண்ணீர்)

5. வாரத்திற்கு முன்று நாட்கள் ஆயில் மசாஜ் செய்தால் போதும்.

ஜலீலா
(தொடரும்)


Wednesday, July 8, 2009

பேட்மிட்டனில் ஆஃப்தாப் - துபாய்








படத்தில் என் கடைசி தங்கையின் முதல் மகன் ஆஃப்தாப் அகமது ரொம்ப சுட்டி.
முதல் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் உட்கார்ந்து இருப்பது தான். ஆஃப்தாப்.
21 க்கு 19 எடுத்து ரன்னர் ஆகிவிட்டான், ரொம்ப ஷாட்டா இருந்ததால எகிறி அடிக்க முடியாபோச்சு.


ஆனால் முதல் மேட்ச் வின் பண்ணதுக்கு கப்பு வாங்கியாச்சு.

Monday, July 6, 2009

சமைய‌ல‌றையில் குழ‌ந்தை








குழந்தைய கையில் வைத்து கொண்டு சமைக்காதீர்கள்.
அது பெரும் ஆபத்து.
அதுவும் போன் காதில், ஒரு கையில் குழந்தை, ஒரு கையில் கரண்டி இதேல்லாம் ரொம்ப வே ஆபத்தில் முடியும்.
கொஞ்சம் குழந்தை எகிறினாலும், நிலைமை ரொம்பவே மோசம்.அதே போல் தூக்க கலக்கத்திலும் போய் பால் காய்ச்சாதீர்கள்
.







எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு 10 வருடம் முன். காலையில் தூக்கத்தில் போய் பாலை காய்ச்சி என்று புரியமல் தன் வயிற்றில் கொட்டி கொண்டு வயிறு, தொடை எல்லாம் பொத்து கொண்டது.ஃப்பார்மசியில் ஒரு கீரிமை வாங்கி தடவினார்கள்.
அது ஆண்களுக்கு கொடுக்கும் ஆயிண்மெண்டாம், பெண்களுக்கும் , ஆண்களுக்கும் அவர்கள் சருமத்திற்கு ஏற்றவாரு மருந்துகள் இருக்கும்.அந்த‌ ஆயிண்ட்மெண்ட் போட்ட‌தில் மேலே எல்லாம் மீண்டும் கொப்புள‌ம் அதிக‌மாகி விட்ட‌து.டாக்ட‌ர் கிட்ட‌ போனால் போலீஸ் கேஸாகிடும் என்று ப‌ய‌ந்து அந்த‌ பெண் வீட்டிலேயே இர‌ண்டு மாத‌மாக‌ டிரெஸ்ஸும் போட‌ முடியாம‌ல், குழ‌ந்தைக்கு வெரும் ரெடிமேட் புட் அவ‌ங்க‌ ஹ‌ஸு காலையில் வைத்து விட்டு போகும் நூடுல்ஸுமா க‌ழித்தார்க‌ள்.
இன்னொரு அறையில் பேச்சுலர் தங்கி இருந்ததால் பாத்ரூமும் போக முடியாமல்.ரொம்பவே அவஸ்தை பட்டுள்ளார். பிள்ளைக்கு காலையில் இருந்து இர‌வு பேம்ப‌ரும் மாற்ற‌ முடியாம‌ல் த‌வித்தார்க‌ள்.கேட்டு விட்டு ரொம்ப‌ க‌ல‌ங்கி போய் விட்டோம். எல்லாம் ச‌ரியான‌ பிற‌கு தான் என‌க்கு தெரிந்த‌து, போய் பார்த்து வ‌ந்தோம்.



அப்படி வேற வழியில்லை என்கிற போது கண்ணெதிரில் நிறைய சாமான்கள் கொடுத்து விளையாட விட்டு வேலை பாருங்கள்.
இல்லை டைம் பிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் இந்த நேரத்திற்குள் வேலைய முடிக்கனும் என்று.




குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு தனி அறையில் விடாதீர்கள்.தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடுவார்கள்.ச‌மைக்கும் முன் குழ‌ந்தையை குளிக்க‌வைத்து வயிற்றை நிறைத்து தூங்க‌ வைத்தால் க‌ண்டிப்பாக‌ ஒரு ம‌ணி நேர‌மாவ‌து தூங்குவார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் கூட‌ ச‌மைய‌லை முடிக்க‌லாம்.









வேலையை சுலபமாக்க இரண்டு நாளைக்கு சேர்த்து சமைத்து கொள்ளுங்கள்.
அல்லது கணவர் வீடடில் இருக்கும் போது மற்ற வேலைகளை முடித்துக்கொள்ளுங்கள்.















நிறைய பேர் இப்போது இப்படி தான் சமைக்கிறார்கள் பத்த குறைக்கு சாட்டிங் வேறு.இத பெருமையா வேற சொல்லி கொள்வது குழந்தைய கையில் வைத்து கொண்டு தான் சமைத்து கொண்டே பேசுகீறேன் என்று..
எல்லாம் பட்டு விட்டு பின்னாடி அவஸ்தை படுவதை விட பிளான் பண்ணி வேலைகளை முடிப்பது நல்லது, இதனால் ஆபிஸில் கணவருக்கும் நிம்மதி போகும். லீவு போடவேண்டிவரும்.உடலளவில் பெரும் பாதிப்பு வேறு ஏற்படும்.